BREAKING: இந்த மாவட்டத்தில் பள்ளிகளுக்கு மட்டும் விடுமுறை.. சற்றுமுன் மாவட்ட ஆட்சியர் அறிவிப்பு..!! – cinefeeds
Connect with us

LATEST NEWS

BREAKING: இந்த மாவட்டத்தில் பள்ளிகளுக்கு மட்டும் விடுமுறை.. சற்றுமுன் மாவட்ட ஆட்சியர் அறிவிப்பு..!!

Published

on

கனமழை காரணமாக நீலகிரி மாவட்டத்தில் உள்ள 6 தாலுகாக்களில் உள்ள பள்ளிகளுக்கு மட்டும் இன்று (அக்டோபர் 24) விடுமுறை அளித்து மாவட்ட ஆட்சியர் அதிரடி உத்தரவு பிறப்பித்துள்ளார். இதன்படி உதகமண்டலம், குன்னூர், கோத்தகிரி, குந்தா, கூடலூர் மற்றும் பந்தலூர் ஆகிய வட்டங்களில் உள்ள பள்ளிகளுக்கு இந்த விடுமுறை அறிவிப்பு பொருந்தும்.

நீலகிரி மாவட்டத்தின் பல்வேறு பகுதிகளில் நேற்றிரவு முதலே பரவலாகக் கனமழை பெய்து வருகிறது. மழையின் தீவிரம் தொடர்ந்து நீடிப்பதன் காரணமாக, பள்ளி மாணவர்களின் பாதுகாப்பைக் கருத்தில் கொண்டு இந்த அவசர விடுமுறை அறிவிப்பை மாவட்ட நிர்வாகம் வெளியிட்டுள்ளது.

Advertisement
Continue Reading
Advertisement

Copyright © 2023 www.cinefeeds.in