“மண்ணும் நீரும் பஸ்சை அமுக்கியது”.. பல மணி நேரம் உயிருக்கு போராடினேன்… மீட்கப்பட்ட கண்டக்டரின் அதிரடி வாக்குமூலம்..!! – cinefeeds
Connect with us

LATEST NEWS

“மண்ணும் நீரும் பஸ்சை அமுக்கியது”.. பல மணி நேரம் உயிருக்கு போராடினேன்… மீட்கப்பட்ட கண்டக்டரின் அதிரடி வாக்குமூலம்..!!

Published

on

தமிழகத்தில் தீவிரமடைந்துள்ள வடகிழக்கு பருவமழையால், நீலகிரி மாவட்டம் ஊட்டி மற்றும் குன்னூர் மலைப்பாதைகளில் விடிய விடியக் கொட்டிய மழையால் பெரும் மண்சரிவு ஏற்பட்டுள்ளது. இதில் குன்னூர் – மேட்டுப்பாளையம் மலைப்பாதையில் பர்லியார் அருகே ஊட்டியில் இருந்து கோவை நோக்கி வந்த அரசுப் பேருந்து ஒன்று திடீரென ஏற்பட்ட மண்சரிவில் சிக்கி முழுமையாக அமுங்கியது. இடிபாடுகளுக்குள் சிக்கிய பேருந்தின் நடத்துநர் கேசவனை மீட்புக் குழுவினர் பத்திரமாக மீட்டு மேட்டுப்பாளையம் அரசு மருத்துவமனையில் அனுமதித்துள்ளனர்.

சிகிச்சை பெற்று வரும் நடத்துநர் கேசவன் இந்த அதிர்ச்சி விபத்து குறித்துப் பேசுகையில், மழையின் காரணமாகப் பேருந்தில் இருந்த ஒருசில பயணிகளும் முன்கூட்டியே இறங்கிவிட்டதாகக் குறிப்பிட்டுள்ளார். இன்று அதிகாலை பேருந்து பர்லியார் அருகே வந்தபோது ஓட்டுநர் ஜனகராஜும் தானும் மட்டுமே பேருந்தில் இருந்ததாகக் கூறியுள்ளார். அந்தச் சமயத்தில் மலைப்பாதையில் திடீரென இரண்டு இடங்களில் மரங்கள் முறிந்து விழுந்ததால், மேற்கொண்டு செல்வது ஆபத்து என உணர்ந்து பேருந்தைப் பாதுகாப்பான இடத்திற்கு மாற்ற ஓட்டுநர் முயன்றுள்ளார்.

Advertisement

ஆனால், அவர்கள் சுதாரிப்பதற்கு முன்பாகவே மழைநீர் பெருக்கெடுத்து மண்ணோடு கலந்து காட்டாறு போல் ஓடிவந்து பேருந்தை முழுமையாக அமுக்கியதாகக் கண்ணீருடன் தெரிவித்துள்ளார். பேருந்துக்குள் பல மணி நேரம் உயிருக்குப் போராடிய நிலையில், தீயணைப்பு மற்றும் மீட்புக் குழுவினர் வந்து தன்னை மீட்டதாக அவர் விவரித்துள்ளார். தொடர்ந்து மழை பெய்து வருவதால் அப்பகுதியில் மீட்புப் பணிகள் சவாலாக மாறியுள்ளன.

Advertisement
Continue Reading
Advertisement

Copyright © 2023 www.cinefeeds.in