LATEST NEWS
“வர்றவங்க வரட்டும், பழைய ஆளுங்கதான் ஸ்ட்ராங்” தனுஷ் அதிமுக வருகை குறித்த கேள்விக்கு லீமா ரோஸ் அதிரடி பதில்..!!
திருச்சி மாவட்டம் லால்குடியில் இன்று த.வெக சட்டமன்ற உறுப்பினர் லீமா ரோஸ் மார்ட்டின் செய்தியாளர்களைச் சந்தித்துப் பேசினார். அப்போது அவரிடம், நடிகர் தனுஷ் அதிமுகவில் இணையப் போவதாக வெளியாகும் தகவல்கள் குறித்துச் செய்தியாளர்கள் கேள்வி எழுப்பினர். அதற்குப் பதிலளித்த அவர், அரசியலுக்கு யார் வேண்டுமானாலும் வரலாம் என்ற தொனியில் தனது கருத்தைப் பதிவு செய்தார்.
இது குறித்து மேலும் பேசிய லீமா ரோஸ் மார்ட்டின், “கட்சிக்கு வருகிறவர்கள் வரட்டும், வந்து மக்கள் பணிகளைச் செய்யட்டும்; ஆனால் கட்சியைப் பொறுத்தவரைப் பழைய ஆட்கள்தான் எப்போதுமே பலமானவர்கள் (ஸ்ட்ராங்)” என்று குறிப்பிட்டார். புதியவர்களின் வருகை இருந்தாலும், நீண்ட காலமாக கட்சியில் இருக்கும் மூத்த நிர்வாகிகளின் முக்கியத்துவமே முதன்மையானது என்பதை அவர் இதன் மூலம் வெளிப்படுத்தியுள்ளார்.
தொடர்ந்து அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமியின் தலைமைப் பண்பைப் பாராட்டிய அவர், “அண்ணன் எடப்பாடி பழனிசாமி அவர்கள் அனைவரையும் ஒருங்கிணைத்து, மிகவும் நல்லபடியாக கட்சியை வழிநடத்தி வருகிறார்” என்று தெரிவித்தார். நடிகர் தனுஷ் அரசியல் வருகை குறித்த வதந்திகள் பரவி வரும் சூழலில், சட்டமன்ற உறுப்பினரின் இந்த அறிக்கை அரசியல் வட்டாரத்தில் பரப்பரப்பாகப் பேசப்பட்டு வருகிறது.
