கிட்னி திருட்டு சர்ச்சை டூ சொகுசு ஹெலிகாப்டர்… தந்தை பிறந்தநாளுக்கு ₹40 கோடியில் ஹெலிகாப்டர் சர்ப்ரைஸ்… யார் இந்த கதிரவன்…? வெளியான பரபரப்பு தகவல்..!! – cinefeeds
Connect with us

LATEST NEWS

கிட்னி திருட்டு சர்ச்சை டூ சொகுசு ஹெலிகாப்டர்… தந்தை பிறந்தநாளுக்கு ₹40 கோடியில் ஹெலிகாப்டர் சர்ப்ரைஸ்… யார் இந்த கதிரவன்…? வெளியான பரபரப்பு தகவல்..!!

Published

on

திருச்சி மாவட்டம் மண்ணச்சநல்லூர் தொகுதி திமுக எம்.எல்.ஏ. கதிரவன், தனது தந்தை சீனிவாசனின் 81-வது பிறந்தநாளை முன்னிட்டு அவருக்கு ₹40 கோடி மதிப்பிலான புதிய ஹெலிகாப்டர் ஒன்றை பரிசாக வழங்கியுள்ளார். பெரம்பலூர் மாவட்டம் புதுநடுவலூரில் 30 ஆயிரத்திற்கும் மேற்பட்டோருக்கு அசைவ விருந்துடன் மிகவும் பிரம்மாண்டமாக நடைபெற்ற இந்த பிறந்தநாள் விழாவில், 5 பேர் அமரக்கூடிய இந்த சொகுசு ஹெலிகாப்டர் Dhanalakshmi Srinivasan Group நிறுவனங்களின் நிறுவனரான சீனிவாசனுக்கு சர்ப்ரைஸாக வழங்கப்பட்டது. தற்போது இந்த ஹெலிகாப்டர் மூலம் சீனிவாசன் பழனி, கொடைக்கானல், ஊட்டி போன்ற ஆன்மீக மற்றும் சுற்றுலாத் தலங்களுக்குப் பயணம் செய்து வரும் வீடியோக்கள் சமூக வலைதளங்களில் வைரலாகி வருகின்றன.

இருப்பினும், இந்த பிரம்மாண்டப் பரிசு அரசியல் மற்றும் சமூக வலைத்தளங்களில் கடுமையான விவாதப் பொருளாக மாறியுள்ளது. கடந்த காலங்களில் ஏழை நெசவாளர்களை ஏமாற்றி சட்டவிரோதமாக சிறுநீரகம் மாற்று அறுவை சிகிச்சை செய்ததாகக் கூறப்படும் வழக்கில், சீனிவாசனுக்குச் சொந்தமான தனலட்சுமி சீனிவாசன் மருத்துவக் கல்லூரி மருத்துவமனை சிக்கி, அதன் உரிமமும் ரத்து செய்யப்பட்டது. இந்த மோசடி விவகாரம் தொடர்பாக எதிர்க்கட்சிகள் விமர்சித்து வரும் நிலையில், தேர்தல் வேட்புமனுவில் குறைவான சொத்து விவரங்களைக் குறிப்பிட்டுவிட்டு, தற்போது ₹40 கோடி மதிப்பில் சொகுசு ஹெலிகாப்டரை எம்.எல்.ஏ பரிசளித்திருப்பது பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது.

Advertisement
Continue Reading
Advertisement

Copyright © 2023 www.cinefeeds.in