திருச்சி கிழக்கில் த்ரிஷா என்ட்ரி..? தவெக-வில் களமிறங்குவதாகப் பரவும் போஸ்டர்… மௌனம் காக்கும் விஜய் கட்சி.. தமிழக அரசியலில் பரபரப்பு..!! – cinefeeds
Connect with us

LATEST NEWS

திருச்சி கிழக்கில் த்ரிஷா என்ட்ரி..? தவெக-வில் களமிறங்குவதாகப் பரவும் போஸ்டர்… மௌனம் காக்கும் விஜய் கட்சி.. தமிழக அரசியலில் பரபரப்பு..!!

Published

on

கோவையில் நேற்று நடைபெற்ற ரோடு ஷோ நிகழ்வில் நடிகை த்ரிஷா பங்கேற்றதைத் தொடர்ந்து, தமிழக அரசியல் களத்தில் அவரது பெயர் மீண்டும் பரபரப்பாக பேசப்படத் தொடங்கியுள்ளது. குறிப்பாக, திருச்சியில் விரைவில் நடைபெறவுள்ள தமிழக வெற்றிக் கழகத்தின் மாநாட்டை முன்னிட்டு, திருச்சி கிழக்குத் தொகுதியில் தவெக சார்பில் த்ரிஷா தேர்தல் களமிறங்குவதாக சமூக வலைதளங்களில் சிலர் போஸ்டர்களைப் பகிர்ந்து ட்ரெண்ட் செய்து வருகின்றனர்.

தீயாய் பரவி வரும் இந்த போஸ்டர்கள் மற்றும் அரசியல் வருகை குறித்த வதந்திகளுக்கு தவெக தலைமை தரப்பிலிருந்தோ அல்லது த்ரிஷா தரப்பிலிருந்தோ தற்போது வரை எந்தவொரு அதிகாரப்பூர்வ மறுப்பும் வெளியிடப்படவில்லை. இந்த மௌனம் அரசியல் வட்டாரத்தில் பல்வேறு யூகங்களையும், விவாதங்களையும் மேலும் வலுப்படையச் செய்துள்ளது.

Advertisement

இதற்கிடையே, கோவையில் நேற்று செய்தியாளர்கள் த்ரிஷாவிடம் “அரசியலுக்கு வருவீர்களா?” என்று நேரடியாகக் கேள்வி எழுப்பினர். அதற்கு அவர் வழக்கம்போல் மறுப்பு ஏதும் தெரிவிக்காமல், ஒரு அர்த்தமுள்ள புன்னகையை மட்டும் வெளிப்படுத்திவிட்டுச் சென்றது அனைவரின் கவனத்தையும் ஈர்த்துள்ளதுடன், அவரது அரசியல் என்ட்ரி குறித்த எதிர்பார்ப்பை இரட்டிப்பாக்கியுள்ளது.

Advertisement
Continue Reading
Advertisement

Copyright © 2023 www.cinefeeds.in