LATEST NEWS
“எம்.ஜி.ஆர், விஜய் மாதிரி எல்லாரும் ஆயிட முடியாது” தனுஷ், சிவகார்த்திகேயன் அரசியல் வருகை குறித்து துரைமுருகன் அதிரடி விமர்சனம்..!!
அரசியலில் எல்லாரும் எம்.ஜி.ஆர் அல்லது முதலமைச்சர் ஜோசப் விஜய் ஆகிவிட முடியாது என்று திமுக பொதுச்செயலாளரும் அமைச்சருமான துரைமுருகன் அதிரடியாகத் தெரிவித்துள்ளார். வேலூர் மாவட்டம் காட்பாடியில் உள்ள தனது இல்லத்தில் செய்தியாளர்களைச் சந்தித்த அவரிடம், நடிகர்கள் தனுஷ் மற்றும் சிவகார்த்திகேயன் ஆகியோர் அரசியலுக்கு வர ஆயத்தமாகி வருவதாகக் கூறப்படும் தகவல்கள் குறித்து கேள்வி எழுப்பப்பட்டது.
அதற்குத் தனது பாணியில் பதிலளித்த துரைமுருகன், “ஒருவர் இளநீர் கடை வைத்து அது நன்றாக வியாபாரமானால், அதைப் பார்த்து மற்றவர்களும் அதேபோல இளநீர் கடை வைக்கத் தொடங்குவார்கள்; அது போன்ற ஒரு கேஸ் தான் இந்த நடிகர்களின் அரசியல் ஆசையும்” என்று ஒப்பிட்டுக் கூறினார். மேலும், சினிமா துறையில் இருந்து அரசியலுக்கு வரும் எல்லாராலும் எம்.ஜி.ஆர் மற்றும் விஜய் போன்று மக்கள் செல்வாக்கைப் பெற்று ஆட்சியைப் பிடித்துவிட முடியாது என்றும் அவர் திட்டவட்டமாகக் குறிப்பிட்டார்.
திரையுலகில் இருந்து அரசியல் கட்சி தொடங்கி குறுகிய காலத்திலேயே பெரும் வெற்றியைப் பெற்ற முதலமைச்சர் விஜய்யின் அரசியல் தாக்கத்தோடு, தனுஷ் மற்றும் சிவகார்த்திகேயனின் சாத்தியமான அரசியல் வருகையை ஒப்பிட்டு எதிர்க்கட்சியான திமுகவின் மூத்த தலைவர் இவ்வாறு கருத்துத் தெரிவித்திருப்பது அரசியல் வட்டாரத்திலும், சமூக வலைத்தளங்களிலும் தற்பொழுது பெரும் விவாதத்தையும் கவனத்தையும் பெற்றுள்ளது.
