“எல்லோரையும் கொன்றுவிடுவேன்…” 51 குழந்தைகளுடன் கடத்தப்பட்ட பள்ளி பேருந்து.. உள்ளே பெட்ரோல் ஊற்றிய மிரட்டிய டிரைவர்.. 13 வயது சிறுவன் செய்த அந்த ஒரு மேஜிக்.. பரபரப்பு பின்னணி..!! – cinefeeds
Connect with us

CRIME

“எல்லோரையும் கொன்றுவிடுவேன்…” 51 குழந்தைகளுடன் கடத்தப்பட்ட பள்ளி பேருந்து.. உள்ளே பெட்ரோல் ஊற்றிய மிரட்டிய டிரைவர்.. 13 வயது சிறுவன் செய்த அந்த ஒரு மேஜிக்.. பரபரப்பு பின்னணி..!!

Published

on

இத்தாலியின் மிலன் நகருக்கு அருகில், 51 பள்ளித் குழந்தைகளை பத்திரமாக வீட்டிற்கு அழைத்துச் செல்ல வேண்டிய பேருந்து ஓட்டுநரே, அவர்களைக் கடத்தி உயிருடன் எரிக்க முயன்ற உலகையே உலுக்கிய கொடூரச் சம்பவம் அரங்கேறியுள்ளது. திடீரென பேருந்தின் பாதையை மாற்றிய ஓட்டுநர், குழந்தைகளின் மொபைல் போன்களைப் பறித்து, அவர்களைக் கொலை செய்துவிடுவதாக மிரட்டியதோடு, பேருந்திற்குள் பெட்ரோலையும் ஊற்றியுள்ளார். சில குழந்தைகள் கேபிள் டைகளால் கட்டப்பட்டு பிணைக் கைதிகளாக வைக்கப்பட்டிருந்தனர். இந்த மரண பயத்திற்கு மத்தியிலும், 13 வயது சிறுவனான ராமி ஷெஹாடா தனது மொபைல் போனை ஓட்டுநருக்குத் தெரியாமல் மறைத்து வைத்துள்ளார். ஓட்டுநர் அருகில் இருந்தபோதே, தான் ஏதோ கடவுளை வணங்குவது போல நடித்து, ரகசியமாகப் போலீசாருக்கு போன் செய்து உதவி கோரினார்.

தகவலறிந்து விரைந்து வந்த போலீசார், பேருந்தை மறித்து நிறுத்தினர். இதனால் ஆத்திரமடைந்த ஓட்டுநர், பேருந்திற்குத் தீ வைத்தார். பேருந்துக்குள் தீ வேகமாகப் பரவிய நிலையில், போலீசார் உடனடியாகப் பேருந்தின் ஜன்னல்களை உடைத்து, குழந்தைகளை ஒவ்வொன்றாகப் பத்திரமாக வெளியே இழுத்து மீட்டனர். பேருந்து முற்றிலும் எரிந்து சாம்பலான போதிலும், சிறுவன் ராமியின் சாதுரியத்தாலும் தைரியத்தாலும் 51 குழந்தைகளும் ஒரு உயிர்கூட சேதமின்றி அற்புதமாக உயிர் தப்பினர். பல டஜன் குழந்தைகளின் உயிரைக் காப்பாற்றிய இந்த இளம் வீரரின் துணிச்சலைப் பாராட்டி, இத்தாலி அரசு அவருக்குப் பிற்காலத்தில் அந்நாட்டின் குடியுரிமையை வழங்கி கௌரவித்தது.

Advertisement
Continue Reading
Advertisement

Copyright © 2023 www.cinefeeds.in