LATEST NEWS
OMG..! இத்தாலி கடலில் வரலாறு காணாத பேரழிவு..! மீனவர்களை கதறவிடும் நீல நண்டுகள்… அவற்றை அழிக்க 1.30 லட்சம் ஆக்டோபஸ் படையை கடலில் இறக்கிய அரசு..!!
இத்தாலியின் கடல்பகுதியில் ‘புளூ கிராப்’ எண்ணிக்கை மிகவேகமாக அதிகரித்து பெரும் பாதிப்பை ஏற்படுத்தி வருவதால், அதைச் சமாளிக்க அந்நாட்டு அரசும் விஞ்ஞானிகளும் ஒரு விசித்திரமான நடவடிக்கையை மேற்கொண்டுள்ளனர். அட்லாண்டிக் பெருங்கடலைச் சேர்ந்த இந்த நண்டுகள் பல ஆண்டுகளுக்கு முன்பு கப்பல்களின் நீர் வழியாக இத்தாலிக்கு வந்தடைந்தன. இங்கே அவற்றிற்கு இயல்பான வேட்டை விலங்குகள் எதுவும் இல்லாததால், அவற்றின் பெருக்கம் கட்டுக்கடங்காமல் போயுள்ளது. சுமார் இரண்டு பவுண்ட் எடையும் பலமான நகங்களும் கொண்ட இந்த நீல நண்டுகள், மீனவர்களின் வலைகளைக் கிழிப்பதோடு மட்டுமல்லாமல், கடலில் உள்ள சிப்பிகள்,மட்டிகள் மற்றும் பிற ஓடுடைய கடல் உயிரினங்களை அதிகளவில் அழித்து வருகின்றன.
இந்த நீல நண்டுகளின் படையெடுப்பால் இத்தாலியின் கடல்சார் வணிகம் மற்றும் மீன்பிடித் தொழில் கடுமையாகப் பாதிக்கப்பட்டுள்ளது. மீனவர்கள் மற்றும் விவசாயிகளின் ‘கொல்டிரெட்டி’ அமைப்பின் கூற்றுப்படி, இதுவரை சுமார் 200 மில்லியன் யூரோ வரை இழப்பு ஏற்பட்டுள்ளதாகவும், சில பகுதிகளில் கிளாம்ஸ் உற்பத்தி 70 சதவீதம் வரை சரிந்துள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்த இக்கட்டான சூழலுக்குத் தீர்வு காண பொலோக்னா பல்கலைக்கழக விஞ்ஞானிகள் ‘ஆக்டோ-புளூ’ என்ற திட்டத்தைத் தொடங்கியுள்ளனர். இதன்கீழ், நீல நண்டுகளால் அதிகம் பாதிக்கப்பட்ட அட்ரியாடிக் கடற்கரைப் பகுதிகளில் உள்ள ரிக்சியோன் மற்றும் செசெனாடிகோ கடலில் சுமார் 1.30 லட்சம் சிறிய ‘பேபி ஆக்டோபஸ்களை’ ஆய்வகத்தில் வளர்த்து இறக்கியுள்ளனர்.
ஆராய்ச்சிக்கு தலைமை தாங்கும் டாக்டர் ஒலிவியேரோ மொர்டென்டி கூறுகையில், வளர்ந்த ஒரு ஆக்டோபஸ் தினமும் நான்கு நீல நண்டுகள் வரை வேட்டையாடி உண்ணும் திறன் கொண்டது என்பதால், இது நண்டுகளின் எண்ணிக்கையைக் குறைக்க உதவும் எனக் கூறியுள்ளார். இருப்பினும், இந்த குட்டி ஆக்டோபஸ்களின் இறப்பு விகிதம் 99 சதவீதம் வரை இருக்கும் என்பதால் சவாலும் நிறைந்துள்ளது. தற்போது இந்த நண்டுகள் கடலையும் தாண்டி இத்தாலியின் மிக நீளமான ‘போ’ நதியிலும் சுமார் 100 மைல் தொலைவு வரை ஊடுருவியுள்ளன. அரசு இவைகளைச் சாப்பிடுமாறு மக்களுக்கு விழிப்புணர்வு ஏற்படுத்தி உணவகங்கள் மூலமும் விற்பனையை ஊக்குவித்து வருகின்ற போதிலும், நண்டுகளின் பெருக்கம் மிக அதிகமாக இருப்பதால் நிலைமையைக் கட்டுப்படுத்த ஆக்டோபஸ்களின் உதவியை இத்தாலி நாடியுள்ளது.
