LATEST NEWS
“வீட்டை விட்டு வெளியே வரமாட்டேன்” தந்தை டிரம்பிற்கு நேர்ந்த விபரீதத்தால் தனிமையில் முடங்கிய மகன் பாரன் டிரம்ப்… ஈரானின் பகிரங்கக் கொலை மிரட்டலால் பரபரப்பு..!!
அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்பின் 20 வயது மகன் பாரன் டிரம்ப், தனது தந்தைக்கு எதிராக நடத்தப்பட்ட மூன்று கொலை முயற்சிகளுக்குப் பிறகு, பாதுகாப்பு காரணங்களுக்காக வெளி உலகிற்கு வராமல் தனிமைப்படுத்தப்பட்ட வாழ்க்கையை வாழ்ந்து வருகிறார் என்று நியூயார்க் போஸ்ட் செய்தி வெளியிட்டுள்ளது. நியூயார்க் பல்கலைக்கழகத்தில் தனது இரண்டாம் ஆண்டு படிப்பை முடித்துள்ள அவர், தற்போது பொது இடங்களுக்குச் செல்வதைத் தவிர்த்து, தனது தாய் மெலனியா டிரம்புடன் நியூஜெர்சியில் உள்ள கோல்ஃப் மைதானத்தின் தனிப்பட்ட தங்குமிடத்திலேயே பெரும்பாலான நேரத்தைக் கழித்து வருவதாக அவருக்கு நெருக்கமான வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.
சமீபத்தில் ஈரான் நாட்டின் அரசுத் தொலைக்காட்சி “பாரன் டிரம்பை எங்கே எப்படிக் கொல்லலாம்” என்ற தலைப்பில் ஒரு காணொலியை ஒளிபரப்பியதுடன், அவரது நடமாட்டங்களைக் கண்காணிப்பதாகக் கூறி பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது. அதோடு பாரன் டிரம்ப் தலைக்கு 10 மில்லியன் டாலர் (சுமார் 95 கோடி ரூபாய்க்கும் மேல்) வெகுமதியையும் ஈரான் ஊடகங்கள் அறிவித்துள்ளன. இந்த விவகாரம் டிரம்பின் குடும்பத்திற்கு விடுக்கப்பட்ட மிக விசித்திரமான மற்றும் நேரடி மிரட்டலாகப் பார்க்கப்படுகிறது.
இந்தக் கொலை மிரட்டல் வீடியோ குறித்துத் தாங்கள் அறிந்திருப்பதாகவும், தங்களின் பாதுகாப்பில் உள்ளவர்களுக்கு எதிராக வரும் அனைத்து மிரட்டல்களையும் தீவிரமாக விசாரித்து வருவதாகவும் அமெரிக்க ரகசிய சேவை அமைப்பு தெரிவித்துள்ளது. அதே நேரத்தில், டிரம்பின் மகனைக் கொல்லச் சதித் திட்டம் தீட்டப்படுவதாக வெளியாகும் செய்திகள் அப்பட்டமான பொய் என்று ஈரானின் பாதுகாப்புத் தலைவர் மொஹ்சென் ரெசாய் மறுப்பு தெரிவித்துள்ளார்.
