CRIME
“அட கொடுமையே..! பெற்ற தாயே செய்த கொடூரம்..” கணவனின் துரோகத்தால் இரண்டு மகன்களுக்கு நேர்ந்த விபரீத முடிவு.. குலை நடுங்க வைக்கும் சம்பவம்…!!
உத்தரப் பிரதேச மாநிலம் காசிப்பூரில், குடும்பத் தகராறு மற்றும் மன உளைச்சல் காரணமாகப் பெற்ற தாயே தனது இரு மகன்களுக்கு உணவில் மயக்க மருந்து கொடுத்து, இரும்புத் தடியால் அடித்துக் கொடூரமாகக் கொலை செய்துள்ள அநாகரிக அராஜகச் சம்பவம் மனிதநேயத்தையே உலுக்கியுள்ளது. குற்றம் சாட்டப்பட்ட பூஜா ராஜ்பர் என்ற பெண்ணின் கணவர் அர்ஜுன் மும்பையில் வேலை பார்த்து வரும் நிலையில், அவர் பூஜாவை விவாகரத்து செய்யாமல் அங்கு வேறொரு பெண்ணை மறுமணம் செய்துகொண்டதால் ஏற்பட்ட கடுமையான மன அழுத்தத்தில் பூஜா இந்த விபரீத முடிவை எடுத்துள்ளார். தனது 14 வயது மகன் கரண் மற்றும் 12 வயது மகன் ஆர்யன் ஆகியோரை அவர் மயக்க நிலையில் இருந்தபோது இரும்புத் தடியால் அடித்தே கொலை செய்துள்ளார். இக்கொடூரத்தை நேரில் கண்ட தங்களது 9 வயது சிறுமியையும் கொலை செய்ய அவர் முயன்றபோது, அச்சிறுமி சாதுரியமாகத் தனது தாத்தாவின் அருகில் சென்று படுத்துக்கொண்டதால் நல்வாய்ப்பாகப் உயிர் தப்பியுள்ளார்.
பின்னர் வெளியே சென்றிருந்த பாட்டி வந்து கேட்டபோது பூஜா தயங்கியதால், சந்தேகமடைந்த அவர் கொடுத்த தகவலின் பேரில் சம்பவ இடத்திற்கு விரைந்த லோக்கல் போலீஸார், ரத்த வெள்ளத்தில் கிடந்த இரு சிறுவர்களின் உடல்களையும் கைப்பற்றி, கொலையாளி பூஜாவை இரும்புத் தடியுடன் அதிரடியாகக் கைது செய்தனர். ஒட்டுமொத்த தேசத்தையும் உரைய வைத்துள்ள இக்கொடூரச் சம்பவத்தில், ரக்ஷா பந்தன் பண்டிகை நன்னாளன்று உயிரிழந்த தங்களது இரு அண்ணன்களின் ஜடலத்திற்கு அந்த 9 வயது தங்கை கண்ணீர் மல்க ராக்கி கயிறு கட்டி இறுதி விடைபெற்ற நெஞ்சை உருக்கும் காட்சி பார்ப்போர் எவரையும் கலங்க வைத்துள்ளது. அண்ணன்களுக்கு நீண்ட ஆயுள் வேண்டி வாழ்த்த வேண்டிய பாசத் திருநாளில், தாயின் வெறிச்செயலால் தனது இரு தூண்களையும் பறிகொடுத்துவிட்டு அந்தப் பிஞ்சுச் சிறுமி கதறிய பாசப் போராட்டம் இணையத்தில் பெரும் சோக அலையை ஏற்படுத்தியுள்ளது.
