“காட்டுப்பகுதியில் மாணவனுடன் இருந்த பேராசிரியர்” – பொளந்து கட்டிய போதை கும்பல்.. அடுத்து நடந்த பகீர் சம்பவம்… திருப்பத்தூரில் அதிரடி போலீஸ் வேட்டை..!! – cinefeeds
Connect with us

CRIME

“காட்டுப்பகுதியில் மாணவனுடன் இருந்த பேராசிரியர்” – பொளந்து கட்டிய போதை கும்பல்.. அடுத்து நடந்த பகீர் சம்பவம்… திருப்பத்தூரில் அதிரடி போலீஸ் வேட்டை..!!

Published

on

திருப்பத்தூர் மாவட்டம் ஆம்பூரில் கல்லூரி உதவி பேராசிரியர் ஒருவரைப் போதை கும்பல் மிரட்டித் தாக்கியதோடு, அவரிடமிருந்த பணம் மற்றும் செல்போனைப் பறித்துச் சென்ற பரபரப்புச் சம்பவம் அரங்கேறியுள்ளது. வாணியம்பாடியில் உள்ள இஸ்லாமிய கல்லூரியில் உதவி பேராசிரியராகப் பணியாற்றி வரும் 38 வயதுடைய ஷமீல் அகமது, கடந்த மூன்று நாட்களுக்கு முன்பு இரவு நேரத்தில் ரெட்டித்தோப்பு காட்டுப்பகுதியில் பள்ளி மாணவர் ஒருவருடன் தனியாக இருந்தபோது இந்தத் தாக்குதல் நடந்துள்ளது.

அப்போது அங்கு வந்த அடையாளம் தெரியாத போதை ஆசாமிகள் சிலர், பேராசிரியரையும் மாணவனையும் வழிமறித்துக் கடுமையான வாக்குவாதத்தில் ஈடுபட்டுள்ளனர். மேலும், ஷமீல் அகமதுவை மிரட்டித் கன்னத்தில் தாக்கிய அந்தக் கும்பல், அவரிடமிருந்த பணம் மற்றும் செல்போனைப் பறித்துக் கொண்டதுடன், ஒட்டுமொத்த சம்பவத்தையும் தங்களது செல்போனில் வீடியோவாகப் பதிவு செய்து சமூக வலைதளங்களில் வெளியிட்டுள்ளது. இந்த வீடியோ தற்போது இணையத்தில் வைரலாகிப் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி வருகிறது.

Advertisement

இதனைத் தொடர்ந்து, அந்த மர்ம நபர்கள் பேராசிரியரைத் தொலைபேசியில் தொடர்பு கொண்டு மேலும் பணம் கேட்டு மிரட்டியதாகப் புகார் எழுந்துள்ளது. இதனால் அதிர்ச்சியடைந்த பேராசிரியர் ஆம்பூர் நகர காவல் நிலையத்தில் அளித்த புகாரின் பேரில், போலீசார் வழக்குப் பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். சமூக வலைதளங்களில் பரவி வரும் வீடியோ ஆதாரங்களைக் கொண்டு, தலைமறைவாக உள்ள அந்தப் போதை கும்பலை போலீசார் தீவிரமாகத் தேடி வருகின்றனர்.

Advertisement
Continue Reading
Advertisement

Copyright © 2023 www.cinefeeds.in