மைதானத்திலேயே நேர்ந்த சோகம்..! கபடி விளையாடிக் கொண்டிருந்த 12-ம் வகுப்பு மாணவர் திடீரென மயங்கி விழுந்து உயிரிழப்பு.. திருப்பத்தூரில் அதிர்ச்சி…!! – cinefeeds
Connect with us

LATEST NEWS

மைதானத்திலேயே நேர்ந்த சோகம்..! கபடி விளையாடிக் கொண்டிருந்த 12-ம் வகுப்பு மாணவர் திடீரென மயங்கி விழுந்து உயிரிழப்பு.. திருப்பத்தூரில் அதிர்ச்சி…!!

Published

on

திருப்பத்தூர் லாலா ஏரி பகுதியில் உள்ள ஒரு தனியார் பள்ளியில் நடைபெற்ற கபடி போட்டியில் விளையாடிக் கொண்டிருந்த முகேஷ் என்ற 12-ம் வகுப்பு மாணவர் திடீரென மைதானத்திலேயே மயங்கி விழுந்து உயிரிழந்த சம்பவம் பெரும் சோகத்தையும் அதிர்ச்சியையும் ஏற்படுத்தியுள்ளது.

விளையாட்டின் போது மயக்கமடைந்த மாணவரை அங்கிருந்தவர்கள் உடனடியாக மீட்டு சிகிச்சைக்காக மருத்துவமனைக்குத் தூக்கிச் சென்றனர். ஆனால், அங்கு அவரைப் பரிசோதனை செய்த மருத்துவர்கள், அவர் ஏற்கனவே உயிரிழந்துவிட்டதாகத் தெரிவித்துள்ளனர். இச்சம்பவம் குறித்துப் போலீசார் வழக்குப் பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

Advertisement
Continue Reading
Advertisement

Copyright © 2023 www.cinefeeds.in