LATEST NEWS
“அய்யய்யோ.. வெள்ளத்தில் அடித்துச் செல்லப்பட்ட டேங்கர் லாரி..” அடுத்த நொடியே ஓட்டுநர் செய்த காரியத்தை பாருங்க.. நெஞ்சைப் பதறவைக்கும் வைரல் வீடியோ!
உத்தரப் பிரதேச மாநிலம் லலித்பூர் மாவட்டத்தில் பெய்து வரும் கனமழை காரணமாக, நாரஹட்-மஹ்ரோனி சாலையில் உள்ள குஜான் காட் பாலத்தைக் கடக்க முயன்ற எண்ணெய் டேங்கர் லாரி ஒன்று காட்டாற்று வெள்ளத்தில் அடித்துச் செல்லப்பட்ட பரபரப்புச் சம்பவம் அரங்கேறியுள்ளது. பாலத்தின் மேல் தண்ணீர் மிகத் தீவிரமாகப் பாய்ந்து ஓடிய போதிலும், ஓட்டுநர் லாரியைக் கட்டுப்பாட்டை இழந்து பாலத்தைக் கடக்க முயன்றதாகத் தெரிகிறது. லாரி வெள்ளத்தின் நடுவே சென்றபோது நீரோட்டத்தின் வேகத்தால் முற்றிலும் நிலைதடுமாறி அடித்துச் செல்லப்பட்ட நிலையில், ஓட்டுநர் சமயோசிதமாக லாரியிலிருந்து வெளியே குதித்துத் தனது உயிரைத் தப்பவைத்துக் கொண்டார்.
https://www.instagram.com/reel/DdvmntQjgZ8/?utm_source=ig_web_button_share_sheet
லாரி வெள்ளத்தில் அடித்துச் செல்லப்பட்டு ஆற்றுப் படுகையின் ஓரத்தில் ஒதுங்கிய இந்தத் திடுக்கிடும் காட்சி, அங்கிருந்தவர்களால் வீடியோ எடுக்கப்பட்டுச் சமூக வலைத்தளங்களில் பலத்த வைரலாகி வருகிறது. உத்தரப் பிரதேசத்தில் அடுத்த இரு நாட்களுக்குக் கடுமையான மழைப்பொழிவு இருக்கும் என வானிலை ஆய்வு மையம் ‘ரெட் அலர்ட்’ விடுத்துள்ள சூழலில், முதலமைச்சர் யோகி ஆதித்யநாத் வெள்ள அபாயமுள்ள பகுதிகளில் உள்ள பள்ளிகளை மூடுமாறு மாவட்ட நிர்வாகங்களுக்கு அதிரடி உத்தரவு பிறப்பித்துள்ளார்.
