இன்ஸ்டாகிராம் காதல்.. 6 மாதத்தில் கொலை..! மனைவியை இழுத்த கணவனைத் தடுத்த மாமியார் ரத்த வெள்ளத்தில் துடிதுடிக்க மரணம்… நள்ளிரவில் போதை ஏறி நடந்த பயங்கரம்..!! – cinefeeds
Connect with us

CRIME

இன்ஸ்டாகிராம் காதல்.. 6 மாதத்தில் கொலை..! மனைவியை இழுத்த கணவனைத் தடுத்த மாமியார் ரத்த வெள்ளத்தில் துடிதுடிக்க மரணம்… நள்ளிரவில் போதை ஏறி நடந்த பயங்கரம்..!!

Published

on

விருதுநகர் மாவட்டம் பாலையம்பட்டி பகுதியைச் சேர்ந்த சிவா என்ற இளைஞர், இன்ஸ்டாகிராம் மூலம் செவல்பட்டியைச் சேர்ந்த வாசக தேவி என்ற பெண்ணுடன் பழகிக் காதலித்து, கடந்த 6 மாதங்களுக்கு முன்பு சாதி மறுப்புத் திருமணம் செய்துகொண்டார். ஆனால், திருமணமான ஒரே வாரத்தில் சிவா தினமும் மதுபோதையில் மனைவியுடன் தகராறு செய்ததால், மன உளைச்சலுக்கு ஆளான வாசக தேவி கணவரைப் பிரிந்து செவல்பட்டியில் உள்ள தன் தாய் சாந்தியின் வீட்டிற்கு வந்து தங்கியுள்ளார்.

இந்நிலையில், நேற்று நள்ளிரவில் போதை தலைக்கேறிய நிலையில் மாமியார் வீட்டிற்குச் சென்ற சிவா, தனது மனைவியை வலுக்கட்டாயமாகத் தன்னுடன் அழைக்க முயன்று அவரைத் தாக்கியுள்ளார். இதனைப் பார்த்த மாமியார் சாந்தி (55) தன் மகளைத் தடுத்துக் காப்பாற்ற முயன்றபோது, ஆத்திரமடைந்த சிவா தான் மறைத்து வைத்திருந்த கத்தியை எடுத்து சாந்தியையும், அவரது மகன் சாமி முருகனையும் (32) சரமாரியாகக் குத்தியுள்ளார். இதில் பலத்த காயமடைந்த மாமியார் சாந்தி சம்பவ இடத்திலேயே ரத்த வெள்ளத்தில் பரிதாபமாக உயிரிழந்தார்.

Advertisement

படுகாயமடைந்த சாமி முருகன் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ள நிலையில், சூலக்கரை போலீசார் சிவாவைக் கைது செய்தனர். போலீசாரின் விசாரணையில், தனது மனைவி தன்னுடன் வாழாமல் இருக்க மாமியார்தான் காரணம் எனப் பழிவாங்கும் நோக்கில், திட்டமிட்டுக் கத்தியோடு சென்று இந்தக் கொலையைச் செய்ததாகச் சிவா ஒப்புக்கொண்டுள்ளார். இன்ஸ்டாகிராம் காதலில் தொடங்கி மாமியாரைக் கொலையில் முடிந்துள்ள இந்தச் சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

Advertisement
Continue Reading
Advertisement

Copyright © 2023 www.cinefeeds.in