CRIME
நெஞ்சம் பதறுதே.. மனைவி, குழந்தைகளுக்கு விஷம் கொடுத்துவிட்டு கணவர் செய்த பகீர் காரியம்.. நடந்தது என்ன..? நள்ளிரவில் நேர்ந்த கொடூரம்.. நெஞ்சை உலுக்கும் சம்பவம்..!!
விசாகப்பட்டினம் மாவட்டம் பெந்துர்த்தி மண்டலத்திற்கு உட்பட்ட சிந்துல அக்ரஹாரம் பகுதியில், ஒரே குடும்பத்தைச் சேர்ந்த நான்கு பேர் தற்கொலை செய்துகொண்ட பதைபதைக்கும் கொடூரச் சம்பவம் ஒட்டுமொத்தப் பிராந்தியத்தையும் பெரும் சோகத்தில் ஆழ்த்தியுள்ளது. மல்லா பிரவீன் குமார் என்ற நபர், தனது மனைவி அகில்யா மற்றும் தங்களது இரண்டு குழந்தைகளுக்கு விஷம் கொடுத்துக் கொடூரமான முறையில் கொலை செய்துள்ளார். அதன் பின்னர், அவர் அதே இல்லத்தில் தூக்கிட்டுத் தற்கொலை செய்து கொண்டுள்ளார். ஒரே குடும்பத்தில் நான்கு பேர் விபரீத முடிவு எடுத்த இந்த மெகா விபத்து அப்பகுதி மக்களிடையே பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
இந்த நெஞ்சைப் பதறவைக்கும் துயரச் சம்பவம் குறித்துத் தகவல் அறிந்து சம்பவ இடத்திற்கு விரைந்து வந்த பெந்துர்த்தி லோக்கல் காவல்துறையினர், உடல்களைக் கைப்பற்றிப் பிரேதப் பரிசோதனைக்கு அனுப்பி வைத்துள்ளனர். இதுகுறித்து வழக்குப் பதிவு செய்துள்ள போலீஸார், பிரவீன் குமார் குடும்பத்துடன் இத்தகைய விபரீத முடிவை எடுக்கக் காரணமான அந்த ரகசியப் பின்னணி என்ன, குடும்பத்தில் ஏதேனும் நிதி நெருக்கடி அல்லது பாசப் போராட்டங்கள் இருந்ததா என்ற கோணத்தில் தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர்.
