CRIME
“கர்மா சும்மா விடுமா..?” அவனை கொன்னுட்டேன்… அக்காவை கொன்ற கணவன் கொடூரக் கொலை… பழிக்குப் பழி வாங்கிய மைத்துனரின் அதிரடி செல்பி வீடியோ..!!
தெலுங்கானாவில் பிரபல யூடியூபரான வைஷ்ணவி கொலை செய்யப்பட்டு 4 மாதங்களே ஆன நிலையில், அவரது கணவர் ஹரிபாபுவும் நிஜாமாபாத் நகரில் படுகொலை செய்யப்பட்டுள்ள சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. இந்த கொடூரக் கொலையைத் தானே செய்ததாக வைஷ்ணவியின் சகோதரர் சந்தோஷ் ஒரு செல்பி வீடியோவை வெளியிட்டுப் பொறுப்பேற்றுள்ளார். அந்த வீடியோவில், தான் விரைவில் காவல் நிலையத்தில் சரணடையப் போவதாகவும் அவர் அறிவித்துள்ளது வழக்கில் ஒரு புதிய திருப்பத்தை ஏற்படுத்தியுள்ளது.
கடந்த நான்கு மாதங்களுக்கு முன்பு, 4 மாதக் கர்ப்பிணியாக இருந்த 19 வயது வைஷ்ணவி, அவரது கணவரான சித்தரி ஹரிபாபுவால் (26) கொடூரமாகக் கழுத்து நெரித்துக் கொலை செய்யப்பட்டதாகக் குற்றம் சாட்டப்பட்டது. வைஷ்ணவியின் தந்தை அளித்த புகாரின் அடிப்படையில் காவல்துறையினரால் கைது செய்யப்பட்ட ஹரிபாபு, சில நாட்களுக்கு முன்புதான் ஜாமீனில் சிறையிலிருந்து வெளியே வந்திருந்தார். சிறையிலிருந்து வெளிவந்த அவர், நிஜாமாபாத்தில் உள்ள ஒரு முக்கியச் சந்திப்பில் சோளக்கதிர் விற்றுக் கொண்டிருந்தபோது இந்தத் தாக்குதல் நடந்துள்ளது.
வியாபாரத்தின் இடையே தாகம் எடுத்து அருகில் உள்ள கடைக்குச் சென்றபோது, காரில் வந்த மர்ம நபர்கள் கூர்மையான ஆயுதங்களால் ஹரிபாபுவின் தலையில் பலமாகத் தாக்கியுள்ளனர்; இதில் அவர் சம்பவ இடத்திலேயே பரிதாபமாக உயிரிழந்தார். இந்த ஒட்டுமொத்த கொடூரக் கொலையும் அங்கிருந்த சிசிடிவி கேமராவில் பதிவாகியுள்ளது. தற்பொழுது இந்தச் சிசிடிவி காட்சிகள் மற்றும் சந்தோஷ் வெளியிட்ட செல்பி வீடியோ ஆகியவற்றின் அடிப்படையில் காவல்துறையினர் தீவிர விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
