CRIME
அடப்பாவமே.. நள்ளிரவில் தூங்கிய கணவன்.. மனைவியும் பிள்ளைங்களுக்கும் சேர்ந்து செய்த கொடூரம்.. திடுக்கிடும் பின்னணி..!!
தெலுங்கானா மாநிலம் நாகர்கர்னூல் மாவட்டம், அச்சம்பேட்டை மண்டலத்தில் உள்ள சிங்கம் பள்ளி கிராமத்தில், தூங்கிக் கொண்டிருந்த கணவனை மனைவியே உரல் கல்லைக் கொண்டு அடித்துக் கொன்ற கொடூரச் சம்பவம் அரங்கேறியுள்ளது. 68 வயதான பொட்டுபல்லி பால்நாரி என்பவர் நேற்று இரவு தனது வீட்டில் தூங்கிக் கொண்டிருந்தபோது, அவரது முதல் மனைவி, தங்களது இரண்டு மகன்கள் மற்றும் ஒரு மகளுடன் சேர்ந்து பால்நாரி மீது உரல் கல்லைப் போட்டுத் கொடூரமாகத் தாக்கிப் படுகொலை செய்துள்ளார்.
இச்சம்பவம் குறித்து இன்று காலை பால்நாரியின் உறவினர்கள் காவல்துறையினருக்குத் தகவல் கொடுத்துள்ளனர். தகவல் கிடைத்தவுடன் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்த போலீஸார், உடலைக் கைப்பற்றிப் பிரேதப் பரிசோதனைக்கு அனுப்பி வைத்துவிட்டு விசாரணையைத் தொடங்கியுள்ளனர். உயிரிழந்த பால்நாரி தனது இரண்டாவது மனைவியுடன் வாழ்ந்து வந்ததும், இதனால் ஏற்பட்ட சொத்துத் தகராறு மற்றும் தொடர்ச்சியான குடும்பச் சண்டைகளுமே இந்தக் கொலைக்குக் காரணமாக இருக்கலாம் என போலீஸார் முதற்கட்ட விசாரணையில் சந்தேகிக்கின்றனர். இச்சம்பவம் தொடர்பாக அச்சம்பேட்டை காவல்துறையினர் வழக்குப் பதிவு செய்து தீவிர விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
