என்னப்பா சொல்றீங்க…?! ஒரே மாசத்துல ரூ.18 லட்சம் சம்பளமா..? லாரி ஓட்டுநரின் வாழ்க்கையை மாற்றிய சாலை ஓர சமையல் வீடியோ..!! – cinefeeds
Connect with us

LATEST NEWS

என்னப்பா சொல்றீங்க…?! ஒரே மாசத்துல ரூ.18 லட்சம் சம்பளமா..? லாரி ஓட்டுநரின் வாழ்க்கையை மாற்றிய சாலை ஓர சமையல் வீடியோ..!!

Published

on

ஜார்க்கண்டின் ஜம்தாரா மாவட்டத்தைச் சேர்ந்த ராஜேஷ் ரவானி என்பவர், தனது குடும்பத்தைக் காப்பாற்றுவதற்காக கடந்த 20 ஆண்டுகளுக்கும் மேலாக சரக்கு லாரி ஓட்டுநராகப் பணியாற்றி வந்தார். தனது நீண்ட தூரப் பயணங்களின் போது சாலைகளில் வாகனத்தை நிறுத்தி சமைத்து, அதை புகைப்படம் எடுத்து குடும்பத்தினருக்கு வாட்ஸ்அப் மூலம் அனுப்பி வந்தார். இதனைத் தொடர்ந்து அவரது மகன் சாகர் ரவானி, தனது தந்தையிடம் பயனர்கள் கேட்டுக் கொண்டதற்கு இணங்க, சமைக்கும் வீடியோக்களைத் தொகுத்து 2021-இல் ‘ஆர் ராஜேஷ் வ்லாக்ஸ்’ என்ற யூடியூப் சேனலைத் தொடங்கி பதிவேற்றினார்.

சாலையோரங்களில் இவர் மட்டன், சிக்கன், மீன் மற்றும் பன்னீர் போன்ற உணவுகளைச் சமைக்கும் முழுநீள வீடியோக்கள் சமூக வலைதளங்களில் வைரலாகி, பதிவிட்ட 24 மணி நேரத்திற்குள் 4,50,000-க்கும் அதிகமான பார்வைகளைப் பெற்றன. லாரி ஓட்டுநர் பணியில் மாதத்திற்கு ரூ.25,000 முதல் ரூ.30,000 வரை மட்டுமே சம்பாதித்த ராஜேஷிற்கு, தற்போது யூடியூப் மூலம் மாதத்திற்கு ரூ.4 லட்சம் முதல் ரூ.5 லட்சம் வரையிலும், சில சமயங்களில் ஒரே மாதத்தில் ரூ.18 லட்சம் வரையிலும் வருமானம் கிடைக்கத் தொடங்கியது.

Advertisement

இவரது இந்த நெகிழ்ச்சியான பயணமும் விடாமுயற்சியும் பிரபல தொழிலதிபர் ஆனந்த் மஹிந்திராவின் கவனத்தைப் பெற்று, சமூக வலைதளத்தில் அவரது பாராட்டையும் பெற்றது. யூடியூப்பில் கிடைத்த வருமானத்தைக் கொண்டு ராஜேஷ் தனது லாரியை குளிரூட்டப்பட்ட அதிநவீன சொகுசு வாகனமாக மாற்றியுள்ளார். தற்போது இவரது யூடியூப் சேனலை சுமார் 30 லட்சம் பேரும், இன்ஸ்டாகிராம் பக்கத்தை 20 லட்சத்திற்கும் அதிகமான பயனர்களும் பின்தொடர்ந்து வருகின்றனர்.

Advertisement
Continue Reading
Advertisement

Copyright © 2023 www.cinefeeds.in