சென்னை மக்களே உஷார்… செப்டம்பர் 30-க்குள் இதைச் செய்யாட்டி அபராதம்.. மாநகராட்சி விடுத்துள்ள அதிரடி எச்சரிக்கை..!! – cinefeeds
Connect with us

LATEST NEWS

சென்னை மக்களே உஷார்… செப்டம்பர் 30-க்குள் இதைச் செய்யாட்டி அபராதம்.. மாநகராட்சி விடுத்துள்ள அதிரடி எச்சரிக்கை..!!

Published

on

பெருநகர சென்னை மாநகராட்சியின் புதிய உத்தரவின்படி, எல்லைக்குட்பட்ட சொத்து உரிமையாளர்களும் நிறுவனங்களும் தங்களின் சொத்து மற்றும் தொழில் வரிகளை வரும் செப்டம்பர் 30, 2026-க்குள் முழுமையாகச் செலுத்த வேண்டியது கட்டாயமாக்கப்பட்டுள்ளது. குறிப்பாக, தனியார் மற்றும் அரசு நிறுவனங்கள் தங்கள் ஊழியர்களின் சம்பளத்திலிருந்து தொழில் வரியை முறையாகப் பிடித்தம் செய்து மாநகராட்சிக்கு அனுப்புவது அவர்களின் சட்டரீதியான பொறுப்பாகும் என ஆணையர் ஜி.எஸ்.சமீரன் சுட்டிக்காட்டியுள்ளார். இந்த இறுதித் தேதிக்குப் பிறகும் வரியைச் செலுத்தாமல் தாமதிப்பவர்களுக்கு, விதிகளின்படி கூடுதல் அபராத வட்டி விதிக்கப்பட்டு நடவடிக்கை எடுக்கப்படும் என்றும் மாநகராட்சி நிர்வாகம் திட்டவட்டமாக எச்சரித்துள்ளது.

பொதுமக்கள் மற்றும் நிறுவனங்கள் எவ்வித சிரமமுமின்றி எளிதாக வரி செலுத்துவதற்கு ஏதுவாக வார விடுமுறை நாட்களான சனி மற்றும் ஞாயிற்றுக்கிழமைகளிலும் சென்னை மாநகராட்சியின் மண்டல அலுவலகங்கள் இயங்கும். மேலும், ரிப்பன் கட்டட தலைமையிடத்தில் உள்ள வருவாய்த்துறை பொது வசூல் மையமும் இந்த விடுமுறை நாட்களில் செயல்படும் என்பதால், பொதுமக்கள் இந்த வாய்ப்பைப் பயன்படுத்தித் தங்களின் வரிகளை உரிய நேரத்திற்குள் செலுத்தி அபராதத்தைத் தவிர்க்குமாறு கேட்டுக்கொள்ளப்பட்டுள்ளது.

Advertisement
Continue Reading
Advertisement

Copyright © 2023 www.cinefeeds.in