“என்ன கொடுமை இது” வீட்டுக்கு வர மறுத்த மனைவியின் மூக்கை கடித்து துப்பிய கணவன்… தெலங்கானாவில் அரங்கேறிய பகீர் சம்பவம்..! – cinefeeds
Connect with us

LATEST NEWS

“என்ன கொடுமை இது” வீட்டுக்கு வர மறுத்த மனைவியின் மூக்கை கடித்து துப்பிய கணவன்… தெலங்கானாவில் அரங்கேறிய பகீர் சம்பவம்..!

Published

on

தெலங்கானா மாநிலத்தில், தாய் வீட்டிலிருந்து தன்னுடன் வர மறுத்த மனைவியின் மூக்கைக் கணவரே கடித்துத் துண்டித்த கொடூரச் சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. கணவனுடன் ஏற்பட்ட கோபத்தில் மமதா என்ற பெண், தனது பெற்றோர் வீட்டிற்குச் சென்றுள்ளார். அவரைத் திரும்ப அழைத்து வருவதற்காக அவரது கணவர் மணிச்சந்தர் மாமனார் வீட்டுக்குச் சென்றுள்ளார்.

அங்கு மனைவியை குடும்பம் நடத்த அழைத்தபோது இருவருக்கும் இடையே கடுமையான வாக்குவாதம் ஏற்பட்டு, தகராறாக மாறியுள்ளது. இதில் ஆத்திரமடைந்த மணிச்சந்தர், தனது மாமனாரைக் கட்டையால் பயங்கரமாகத் தாக்கியுள்ளார். இந்தத் தாக்குதலில் மாமனாரின் மண்டை உடைந்து ரத்தம் கொட்டியுள்ளது.

Advertisement

தனது தந்தை தாக்கப்படுவதைக் கண்டு அதிர்ச்சியடைந்த மமதா, சண்டையைத் தடுக்க முயன்றுள்ளார். அப்போது மணிச்சந்தர், மமதாவையும் தாக்கி அவரது மூக்கைக் கடித்ததில், மூக்கின் ஒரு பகுதி துண்டாகியுள்ளது. இச்சம்பவத்தில் காயமடைந்தவர்கள் சிகிச்சைக்காக மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர். இச்சம்பவம் குறித்து போலீசார் வழக்குப் பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

Advertisement
Continue Reading
Advertisement

Copyright © 2023 www.cinefeeds.in