LATEST NEWS
இரவோடு இரவாக EPS-க்கு இன்ப அதிர்ச்சி… அதிமுகவுக்கு ஆதரவு தெரிவித்த முக்கிய கட்சி..!!
மதுராந்தகம் மற்றும் தாராபுரம் சட்டமன்றத் தொகுதிகளின் இடைத்தேர்தலில், அதிமுகவுக்குத் தனது முழு ஆதரவை வழங்குவதாக தமிழ் மாநில முஸ்லிம் லீக் கட்சி அதிகாரப்பூர்வமாக அறிவித்துள்ளது. அதிமுக தலைமையிலான கூட்டணியின் வெற்றியை உறுதி செய்யும் நோக்கில் இந்த முடிவு எடுக்கப்பட்டுள்ளதாக அக்கட்சியின் தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இதுதொடர்பாக, தமிழ் மாநில முஸ்லிம் லீக் கட்சியின் தலைவர் ஷேக் தாவூத் மற்றும் அக்கட்சியின் முக்கிய நிர்வாகிகள், அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி கே. பழனிசாமியை நேரில் சந்தித்துப் பேசினர். இந்தச் சந்திப்பின் போது, இடைத்தேர்தலில் அதிமுகவுக்கு ஆதரவளிப்பதற்கான அதிகாரப்பூர்வ கடிதத்தை அவர்கள் அவரிடம் வழங்கினர்.
மேலும், இந்த இரு தொகுதிகளிலும் அதிமுக வேட்பாளர்களின் வெற்றிக்குத் தங்களது கட்சித் தொண்டர்கள் தீவிரமாகப் பாடுபடுவார்கள் என்றும் அவர்கள் உறுதியளித்துள்ளனர். ஏற்கெனவே அதிமுகவுக்கு பாஜக, அமமுக, புதிய உழைப்பாளர் கட்சி உள்ளிட்ட கட்சிகள் ஆதரவு தெரிவித்துள்ள நிலையில், தற்போது தமிழ் மாநில முஸ்லிம் லீக் கட்சியும் இணைந்துள்ளது அதிமுகவின் தேர்தல் களத்தை மேலும் பலப்படுத்தியுள்ளது.
