CRIME
அடப்பாவிகளா.. நண்பனுடன் ‘அந்த’ கோலத்தில் இருந்த மனைவி.. தட்டிக்கேட்ட கணவனுக்கு நேர்ந்த கொடூரம்.. நெஞ்சை பதறவைக்கும் பின்னணி..!!
பெங்களூருவில் பக்கவாதத்தால் பாதிக்கப்பட்ட கணவன் படுக்கையில் இருந்தபோதே, அவரது மனைவியும் கள்ளக்காதலனும் சேர்ந்து அவரைக் கழுத்தை நெரித்துக் கொலை செய்த கொடூரச் சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. பெங்களூருவைச் சேர்ந்த முபாரக் என்பவருக்குக் கடந்த இரண்டு ஆண்டுகளுக்கு முன்பு பக்கவாதம் ஏற்பட்டு உடல்நலம் பாதிக்கப்பட்டுள்ளது. அந்த இக்கட்டான சூழ்நிலையில் அவருக்கு உதவி செய்வதற்காக அவரது நண்பரான நஹிம் குரேஷி அடிக்கடி வீட்டிற்கு வந்துள்ளார். அப்போது, முபாரக்கின் மனைவி ஷாஹினா பானுவுக்கும் நஹிம் குரேஷிக்கும் இடையே கள்ளத்தொடர்பு ஏற்பட்டுள்ளது.
கணவன் முபாரக் பக்கவாத நோயால் படுக்கையிலேயே முடங்கிக் கிடந்ததைச் சாதகமாகப் பயன்படுத்திக் கொண்ட இந்த ஜோடி, தொடர்ந்து தனிமையில் இருந்து வந்துள்ளது. நாளடைவில் இவர்களது தவறான உறவை முபாரக் நேரில் பார்த்து கடுமையாகக் கண்டித்துள்ளார். தங்களது கள்ளத்தொடர்புக்கு முபாரக் இடையூறாக இருப்பார் எனக் கருதிய ஷாஹினா பானுவும் நஹிம் குரேஷியும் இணைந்து, அவரைத் திட்டமிட்டு கழுத்தை நெரித்துக் கொடூரமாகக் கொலை செய்துள்ளனர். இந்த அதிர்ச்சி மரணம் குறித்து வழக்குப் பதிவு செய்துள்ள பெங்களூரு காவல்துறையினர் இருவரையும் கைது செய்து தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர்.
