CRIME
“‘ஸ்பெஷல் கிளாஸ்’ என்று கூப்பிட்டு இப்படியா..?” தனியறையில் வைத்து மாணவிக்கு முத்தம் கொடுத்த கணினி ஆசிரியர் செய்த அநாகரீக செயல்.. பதறவைக்கும் பின்னணி..!!
உத்தரப் பிரதேச மாநிலம் கோரக்பூரில் உள்ள கணினி பயிற்சி மையம் ஒன்றில், மாணவியிடம் தகாத முறையில் நடந்து கொண்ட ஆசிரியர் ஜகதீஷ் சௌராசியா என்பவரைப் போலீசார் கைது செய்துள்ளனர். கடந்த செப்டம்பர் 9-ஆம் தேதி, வழக்கமான வகுப்புகள் முடிந்த பிறகு, ‘ஸ்பெஷல் கிளாஸ்’ எடுப்பதாகக் கூறி அந்த மாணவியைத் தனியாக இருக்க வைத்துள்ளார். அப்போது அந்த ஆசிரியர் மாணவிக்கு முத்தம் கொடுத்து அநாகரிகமாக நடந்து கொண்டதாகக் கூறப்படுகிறது.
அந்தச் சமயத்தில் எதிர்பாராதவிதமாக அங்கு வந்த மாணவியின் சகோதரர் மற்றும் அவரது நண்பர்கள், ஆசிரியரின் இந்தச் செயலைக் கண்டு அதிர்ச்சியடைந்து அவரைத் தட்டிக்கேட்டுத் தாக்கியுள்ளனர். இந்த மோதலின் போது எடுக்கப்பட்ட வீடியோ சமூக வலைதளங்களில் வெளியாகி பெரும் வைரலானது. இதுகுறித்து ஆசிரியர் தரப்பில், “அவர் என் சகோதரி போன்றவர்” என்று மழுப்பலாகக் கூறப்பட்ட நிலையில், பாதிக்கப்பட்ட மாணவியின் புகாரின் அடிப்படையில் போலீசார் வழக்குப் பதிவு செய்து ஆசிரியரைக் கைது செய்து தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர்.
