LATEST NEWS
“மனிதாபிமானமற்ற அவலம்..!” பணிப்பெண்ணை நாற்காலியில் கட்டி வைத்து.. கொடூரமாக சித்திரவதை செய்த உரிமையாளர்.. இணையத்தில் தீயாய் பரவும் அதிர்ச்சி வீடியோ..!!
உத்தரப் பிரதேச மாநிலம் ஹர்டோய் மாவட்டத்தின் கோட்வாலி தெஹாத் காவல் நிலைய எல்லைக்குட்பட்ட பகுதியில், திருட்டுச் சந்தேகத்தின் பேரில் வீட்டுப் பணிப்பெண் ஒருவரை நாற்காலியில் கட்டி வைத்து வீட்டு உரிமையாளர் கொடூரமாகத் தாக்கிய அதிர்ச்சி வீடியோ சமூக ஊடகங்களில் வெளியாகி வைரலாகி வருகிறது. இந்த மனிதாபிமானமற்ற சம்பவம் அந்தப் பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளதுடன், பொதுமக்களிடையே கடும் அதிர்ச்சியையும் கண்டனங்களையும் எழுப்பியுள்ளது.
பாதிக்கப்பட்ட பணிப்பெண்ணுக்கு மருத்துவப் பரிசோதனை செய்யப்பட்டதைத் தொடர்ந்து, காவல்துறையினர் இந்த விவகாரத்தில் அதிரடி நடவடிக்கை மேற்கொண்டுள்ளனர். வீட்டு உரிமையாளர் உட்பட ஐந்து பேர் மீது எஸ்சி/எஸ்டி வன்கொடுமை தடுப்புச் சட்டம் மற்றும் தாக்குதல் உள்ளிட்ட கடுமையான பிரிவுகளின் கீழ் முதல் தகவல் அறிக்கை பதிவு செய்யப்பட்டுள்ளது. தலைமறைவாக உள்ள குற்றவாளிகளைக் கைது செய்வதற்காகக் காவல்துறையினர் தற்போது தீவிரத் தேடுதல் வேட்டையில் ஈடுபட்டு வருகின்றனர்.
