“தாலி கட்டியாச்சு… இனி நீ இறங்கு..” காரை நிறுத்தி மாப்பிள்ளையை கீழே தள்ளிய பொண்ணு வீட்டார்… பின்னணியில் பகீர்..!! – cinefeeds
Connect with us

CRIME

“தாலி கட்டியாச்சு… இனி நீ இறங்கு..” காரை நிறுத்தி மாப்பிள்ளையை கீழே தள்ளிய பொண்ணு வீட்டார்… பின்னணியில் பகீர்..!!

Published

on

உத்தரப்பிரதேச மாநிலம் ஆசம்கரில் திருமண மோசடி கும்பல் ஒன்று மணமகனை ஏமாற்றி, நகை மற்றும் பணத்துடன் தப்பிச் சென்ற அதிர்ச்சி சம்பவம் வெளிச்சத்திற்கு வந்துள்ளது. ஹர்தோய் மாவட்டம் பில்கிராம் பகுதியைச் சேர்ந்த ராஜ்குமார் என்பவருக்குத் திருமணம் செய்து வைப்பதாகக் கூறி இந்த மோசடிக் கும்பல் அவரைத் தொடர்பு கொண்டுள்ளது. வாட்ஸ்அப்பில் பெண்ணின் புகைப்படத்தை அனுப்பி ராஜ்குமார் குடும்பத்தினரின் நம்பிக்கையைப் பெற்றுத் திருமணத்தை உறுதி செய்துள்ளனர். அதன்படி, புதன்கிழமை அன்று பர்தா பகுதியில் உள்ள பந்தவா மகாதேவ் கோவிலில் முறைப்படி சாஸ்திர சம்பிரதாயங்களுடன் திருமணம் நடைபெற்று முடிந்தது.

திருமணத்தின் போது மணமகள் வீட்டாரிடம் 80,000 ரூபாய் ரொக்கப் பணம், தங்க நகைகள் மற்றும் துணிமணிகளை மணமகன் வீட்டார் வழங்கியுள்ளனர். திருமணம் முடிந்த பிறகு, ராஜ்குமார் தனது புதுமனைவியை அழைத்துக்கொண்டு சொந்த ஊருக்கு காரில் புறப்பட்டுள்ளார். காரில் பயணம் செய்து கொண்டிருந்த போது, பந்தவா சிக்னல் அருகே மணமகளின் போலி தந்தை மற்றும் உடன் வந்த உறவினர்கள் காரை நிறுத்தி, மணமகன் ராஜ்குமாரை வலுக்கட்டாயமாக கீழே இறக்கிவிட்டுள்ளனர். பின்னர், நகைகள், பணம் மற்றும் பொருட்களுடன் மணமகளையும் அழைத்துக்கொண்டு அந்த கும்பல் தப்பி ஓடியது.

Advertisement

இதனால் அதிர்ச்சியடைந்த மணமகனின் தந்தை உடனடியாகக் காவல் நிலையத்தில் புகார் அளித்தார். புகாரின் பேரில் வழக்குப் பதிவு செய்த காவல்துறை தீவிர விசாரணை மேற்கொண்டு வந்தது. வெள்ளிக்கிழமை அன்று கோதஹ்ரா சந்திப்பு பகுதியில் சோதனை நடத்திய காவல்துறையினர், இந்த மோசடியில் ஈடுபட்ட 2 பெண்கள் உட்பட 7 பேர் கொண்ட ‘கொள்ளையடிக்கும் மணமகள்’ கும்பலை கைது செய்தனர். கைது செய்யப்பட்டவர்களிடமிருந்து ரூ.19,650 ரொக்கம், மாங்கல்யம், தோடு, புடவை, ஆடைகள் மற்றும் 2 மோட்டார் சைக்கிள்கள் உள்ளிட்ட பொருட்களை காவல்துறையினர் பறிமுதல் செய்துள்ளனர்.

Advertisement
Continue Reading
Advertisement

Copyright © 2023 www.cinefeeds.in