“அந்த பையனோட உடலுறவு வச்சிக்கோ” கல்லூரி மாணவியை காட்டுக்குக் கடத்தி… சக மாணவிகள் 4 பேர் நடத்திய கொடூர தாக்குதல்.. மிரள வைக்கும் சம்பவம்..!!! – cinefeeds
Connect with us

CRIME

“அந்த பையனோட உடலுறவு வச்சிக்கோ” கல்லூரி மாணவியை காட்டுக்குக் கடத்தி… சக மாணவிகள் 4 பேர் நடத்திய கொடூர தாக்குதல்.. மிரள வைக்கும் சம்பவம்..!!!

Published

on

மத்திய பிரதேச மாநிலத்தில் நான்கு மாணவிகள் இணைந்து சக கல்லூரி மாணவி ஒருவரைக் கொடூரமாகத் தாக்கி, ஒரு ஆண் மாணவருடன் உடலுறவு வைத்துக்கொள்ளுமாறு மிரட்டிய அதிர்ச்சிச் சம்பவம் வெளிச்சத்திற்கு வந்துள்ளது. பாதிக்கப்பட்ட மாணவிக்கு அவருடன் படிக்கும் ஒரு ஆண் மாணவர் வாட்ஸ்அப் மூலம் தொடர்ந்து தொல்லை கொடுத்து வந்துள்ளார். இதனை மாணவி கண்டித்ததால், அந்த ஆண் மாணவனின் வீட்டிற்கு அருகில் வசிக்கும் மற்றொரு கல்லூரி மாணவி, பாதிக்கப்பட்ட மாணவியை ஏமாற்றி ஸ்கூட்டரில் ஒரு தனிமையான காட்டுப் பகுதிக்கு அழைத்துச் சென்றுள்ளார்.

அங்கு ஏற்கனவே முகத்தை மூடிக்கொண்டு காத்திருந்த மேலும் மூன்று மாணவிகளுடன் சேர்ந்து, நான்கு பேரும் அம்மாணவியைக் குச்சியால் அடித்தும், உதைத்தும் கொடூரமாகத் தாக்கியுள்ளனர். தாக்குதலின் போது, சம்பந்தப்பட்ட ஆண் மாணவருடன் உடலுறவு வைத்துக்கொள்ள இணங்குமாறு மிரட்டியதோடு, அவனுக்கு வீடியோ கால் செய்து பாதிக்கப்பட்ட மாணவியை மன்னிப்புக் கேட்கவும் கட்டாயப்படுத்தியுள்ளனர். இறுதியாக அந்த ஆணுடன் உறவில் இருக்க ஒப்புக்கொண்ட பிறகே அவர்கள் மாணவியை விடுவித்துள்ளனர்.

Advertisement

கடந்த ஆகஸ்ட் 6ஆம் தேதி நடந்த இந்தச் சம்பவம் குறித்து பயத்தினால் மாணவி வெளியில் சொல்லாமல் இருந்துள்ளார். ஆனால், மாணவிகள் இத்தாக்குதலை வீடியோ எடுத்து சமூக வலைதளங்களில் பகிர்ந்த நிலையில், அந்த வீடியோ மாணவியின் உறவினர் கண்பட்டு குடும்பத்தினருக்குத் தெரியவந்துள்ளது. இதையடுத்து சம்பவம் நடந்து 38 நாட்களுக்குப் பிறகு செப்டம்பர் 11ஆம் தேதி கோல்கவான் காவல் நிலையத்தில் புகார் அளிக்கப்பட்டு, தற்பொழுது போலீசார் தீவிர விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

Advertisement
Continue Reading
Advertisement

Copyright © 2023 www.cinefeeds.in