குப்பை மேடாக இருந்த நதியை ஒற்றை ஆளாக மாற்றி உலகையே திரும்பிப் பார்க்க வைத்த நாயகன்.. வைரல் வீடியோ தந்த வாழ்நாள் அங்கீகாரம்… சர்வதேச நிறுவனத்தில் வேலைக்கு அழைப்பு…!! – cinefeeds
Connect with us

LATEST NEWS

குப்பை மேடாக இருந்த நதியை ஒற்றை ஆளாக மாற்றி உலகையே திரும்பிப் பார்க்க வைத்த நாயகன்.. வைரல் வீடியோ தந்த வாழ்நாள் அங்கீகாரம்… சர்வதேச நிறுவனத்தில் வேலைக்கு அழைப்பு…!!

Published

on

மத்திய பிரதேசத்தில் கடும் மாசடைந்த அஜ்னர் நதியை ஒற்றை ஆளாய் சுத்தம் செய்த சுரேந்திர சிங் (20) என்ற இளைஞருக்கு சர்வதேச அளவில் அங்கீகாரம் கிடைத்துள்ளது. பல மாதங்களாகத் தொடர்ந்து உழைத்து, குப்பைகளும் கழிவுகளும் நிறைந்திருந்த நதியை அவர் மீட்டெடுத்த வீடியோ சமூக ஊடகங்களில் வைரலாகி உலகளவில் பலரது கவனத்தை ஈர்த்தது. நதிகளைப் பாதுகாக்க அரசாங்கங்களும் அமைப்புகளும் திணறி வரும் வேளையில், ஒரு தனி மனிதனின் இந்த அசாத்திய முயற்சி உலகளவில் பெரும் பாராட்டைப் பெற்று வருகிறது.

இளைஞர் சுரேந்திர சிங்கின் இந்த அர்ப்பணிப்பைக் கண்டு வியந்த The Ocean Cleanup நிறுவனத்தின் தலைமை நிர்வாக அதிகாரி போயன் ஸ்லாட் தங்களது உலகளாவிய அமைப்பில் இணையுமாறு அவருக்கு அதிகாரப்பூர்வ அழைப்பு விடுத்துள்ளார். நெதர்லாந்தைச் சேர்ந்த இந்த சர்வதேச நிறுவனம், உலகின் பல்வேறு பகுதிகளில் உள்ள கடல்கள் மற்றும் நதிகளில் இருக்கும் பிளாஸ்டிக் கழிவுகளை நவீன தொழில்நுட்பங்கள் மூலம் சுத்திகரிக்கும் பணியில் ஈடுபட்டு வருகிறது. ஒற்றை ஆளாக நதியை மீட்டெடுத்த இந்த இந்திய இளைஞரின் உழைப்பு, தற்போது சர்வதேச அளவில் சுற்றுச்சூழல் பாதுகாப்புப் பணிக்கான மாபெரும் அங்கீகாரத்தைப் பெற்றுத் தந்துள்ளது.

Advertisement
Continue Reading
Advertisement

Copyright © 2023 www.cinefeeds.in