LATEST NEWS
“5 நாள் குழந்தைக்கு மாறிய பிளட் குரூப்” முதல்ல A+ அப்புறம் B+.. என்ன நடந்தது..? அதிர்ச்சியில் உறைந்த பெற்றோர்..!!
மத்தியப் பிரதேச மாநிலம் இந்தூரில் உள்ள ஒரு தனியார் பரிசோதனை மையத்தின் அலட்சியத்தால், 5 நாட்களேயான பச்சிளம் குழந்தை ஒன்றின் இரத்த வகை (Blood Group) மாறிய விசித்திரமான சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. டக்கன்வாலா குவா பகுதியில் உள்ள ‘நீரஜ் டயக்னோஸ்டிக்ஸ்’ என்ற மையத்தில் குழந்தையின் இரத்தப் பரிசோதனை செய்யப்பட்டபோது, முதலில் அதற்கு ‘A+’ வகை இரத்தம் என அறிக்கை அளிக்கப்பட்டுள்ளது. பின்னர், குழந்தைக்கு மஞ்சள் காமாலை பாதிப்பு இருந்ததால், சந்தேகமடைந்த பெற்றோர் ‘யுனிபெத் ஸ்பெஷாலிட்டி’ என்ற மற்றொரு மையத்தில் பரிசோதித்தபோது குழந்தைக்கு ‘B+’ வகை இரத்தம் என்பது தெரியவந்தது.
இரண்டு வெவ்வேறு அறிக்கைகளால் அதிர்ச்சியடைந்த குழந்தையின் தந்தை ராஜ்புத், முதல் மையத்தை அணுகி இந்த அபாயகரமான தவறு குறித்துக் கேள்வி எழுப்பியுள்ளார். அதற்கு அந்த மருத்துவமனை நிர்வாகம், இது வெறும் “பிரிண்டிங் தவறு” (Typing error) என்று மிகவும் பொறுப்பற்ற முறையில் பதிலளித்ததோடு, உடனடியாக ‘B+’ என மாற்றப்பட்ட புதிய அறிக்கையை அவரிடம் வழங்கி உண்மையை மறைக்க முயன்றுள்ளது. அவசரக் காலங்களில் தவறான இரத்த வகையின் அடிப்படையில் சிகிச்சையோ அல்லது இரத்தமோ செலுத்தப்பட்டிருந்தால் குழந்தையின் உயிருக்கே ஆபத்து ஏற்பட்டிருக்கும் எனப் பெற்றோர் குற்றம்சாட்டியுள்ளனர்.
இந்தக் கொடூரமான மருத்துவ அலட்சியம் குறித்துப் பாதிக்கப்பட்ட தந்தை, இந்தூர் மாவட்ட முதன்மை மருத்துவ மற்றும் சுகாதார அதிகாரி (CMHO) டாக்டர் மாதவ் ஹசானியிடம் முறையான விசாரணை நடத்தக் கோரிப் புகாரளித்துள்ளார். மேலும், நகரில் தகுதி சான்றிதழ்கள் இன்றி முறையற்ற தரக் கட்டுப்பாட்டுடன் செயல்படும் தனியார் பரிசோதனை மையங்கள் மீது கடுமையான ஒழுங்கு நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றும் அவர் வலியுறுத்தியுள்ளார்.
