இனி டெல்லி மெட்ரோவில் ரீல்ஸ் எடுத்தா அவ்வளவுதான்…13.8 கோடி பார்வைகளையும் 4.7 மில்லியன் லைக்ஸும் பெற்ற அந்த ஒரு ரீல்ஸ்..! கடுப்பாகி DMRC போட்ட அதிரடி உத்தரவு..!! – cinefeeds
Connect with us

LATEST NEWS

இனி டெல்லி மெட்ரோவில் ரீல்ஸ் எடுத்தா அவ்வளவுதான்…13.8 கோடி பார்வைகளையும் 4.7 மில்லியன் லைக்ஸும் பெற்ற அந்த ஒரு ரீல்ஸ்..! கடுப்பாகி DMRC போட்ட அதிரடி உத்தரவு..!!

Published

on

டெல்லி மெட்ரோ ரயில் கார்ப்பரேஷன் சமூக வலைதளக் உள்ளடக்க உருவாக்குநர்களுக்கு இயங்கும் மெட்ரோ ரயில்களின் ஜன்னல்களில் மொபைல் போன்களை வைத்து அபாயகரமான வீடியோக்களை எடுக்க வேண்டாம் என்று எச்சரிக்கை விடுத்துள்ளது. ரயில்கள் இயங்கும்போது ஜன்னல்களில் போன்களை வைத்து ரீல்ஸ் எடுக்கும் இதுபோன்ற செயல்கள், உடன் பயணிக்கும் பயணிகளுக்கு இடையூறு மற்றும் காயங்களை ஏற்படுத்தக்கூடும் என்றும், மொபைல் சாதனங்கள் சேதமடைய வாய்ப்புள்ளது என்றும் தெரிவித்துள்ள மெட்ரோ நிர்வாகம், இதுபோன்ற செயல்களில் ஈடுபடுபவர்கள் மீது கடுமையான நடவடிக்கை எடுக்கப்படும் என்று எச்சரித்துள்ளது.

நிகில் கோச்சார் என்ற உள்ளடக்க உருவாக்குநர் தனது மொபைல் போனை டெல்லி மெட்ரோ ரயிலின் ஜன்னலில் ஒட்டி வைத்துவிட்டு, ரயில் மெதுவாக நகரும் போது அதனுடன் சேர்ந்து ஓடி வீடியோ எடுத்திருந்தார். “மன்மா எமோஷன் ஜாகே” பாடலுடன் கூடிய இந்த வீடியோ சமூக வலைதளங்களில் 138 மில்லியனுக்கும் அதிகமான பார்வைகளையும், 4.7 மில்லியனுக்கும் அதிகமான விருப்பங்களையும் பெற்று பெரும் வைரலானது. இதைப் பின்பற்றி நந்தினி சுக்லா என்ற மற்றொரு நபரும் இதே போன்ற வீடியோவை வெளியிட்டதைத் தொடர்ந்து இந்த ஆபத்தான ட்ரெண்ட் சமூக வலைதளங்களில் வேகமாகப் பரவத் தொடங்கியது.

Advertisement

https://www.instagram.com/p/Dc4_9jexc8Y/?utm_source=ig_web_button_share_sheet

https://www.instagram.com/reel/DctY3lmp7tg/?utm_source=ig_web_button_share_sheet

Advertisement

வீடியோக்கள் வைரலானதைத் தொடர்ந்து, மெட்ரோ வளாகத்திலும் இயங்கும் ரயில்களின் ஜன்னல்களிலும் இதுபோன்ற படப்பிடிப்புகளை நடத்த வேண்டாம் என DMRC கண்டிப்பான வழிகாட்டுதல்களை வழங்கியுள்ளது. சமூக வலைதள வீடியோக்களுக்காகப் பொதுப் போக்குவரத்தையும் பயணிகளின் பாதுகாப்பையும் அச்சுறுத்தலுக்கு உள்ளாக்கக் கூடாது என்றும், பயணிகள் மற்றும் சாதனங்களின் பாதுகாப்பை உறுதி செய்ய அனைவரும் விதிமுறைகளைப் பின்பற்ற வேண்டும் என்றும் மெட்ரோ நிர்வாகம் கேட்டுக்கொண்டுள்ளது.

Advertisement
Continue Reading
Advertisement

Copyright © 2023 www.cinefeeds.in