மரம் விழுந்து நொடிப் பொழுதில் நசுங்கிய கார்… மழையின் கோரத்தாண்டவத்தால் அரங்கேறிய கொடூரம்.. பகீர் சிசிடிவி காட்சி..!! – cinefeeds
Connect with us

LATEST NEWS

மரம் விழுந்து நொடிப் பொழுதில் நசுங்கிய கார்… மழையின் கோரத்தாண்டவத்தால் அரங்கேறிய கொடூரம்.. பகீர் சிசிடிவி காட்சி..!!

Published

on

மத்திய உத்திரபிரதேச மாநிலம் பரேலி மாவட்டத்தில் கடந்த 24 மணி நேரத்தில் மட்டும் சுமார் 127 மிமீ அளவுக்கு மிக பலத்த மழை கொட்டித் தீர்த்துள்ளது. இந்த தொடர் மழையினால் நகரின் பல தாழ்வான பகுதிகள் மற்றும் முக்கிய சாலைகளில் வெள்ளநீர் சூழ்ந்து, மக்களின் இயல்பு வாழ்க்கை முற்றிலும் முடங்கியுள்ளது. தொடர் மழையால் மண்ணில் ஈரப்பதம் அதிகரித்துள்ளதால், நகரின் பல பகுதிகளில் பலவீனமான மரங்கள் வேரோடு சாய்ந்து விழும் அபாயம் ஏற்பட்டுள்ளது.

இதற்கிடையில் பரேலியின் முக்கிய பகுதியான மாடல் டவுனில், சாலையோரம் நிறுத்தப்பட்டிருந்த வெள்ளை நிற சொகுசு காரின் மீது அங்கிருந்த மிகப்பெரிய பழமையான ராட்சத மரம் ஒன்று திடீரென வேரோடு பெயர்ந்து விழுந்தது. நொடிப் பொழுதில் மரம் விழுந்து கார் அப்பளமாய் நொறுங்கும் இந்த பதைபதைக்கும் காட்சிகள், அங்கிருந்த சிசிடிவி கேமராவில் பதிவாகி தற்போது சமூக வலைதளங்களில் பயங்கரமாக வைரலாகி வருகிறது. மரம் விழும் நேரத்தில் காரின் உள்ளேயோ அல்லது அதன் அருகிலோ யாரும் இல்லாததால் நல்வாய்ப்பாக பெரும் உயிர்ச்சேதம் தவிர்க்கப்பட்டது.

Advertisement

தற்போது பரேலி மற்றும் அதன் சுற்றுவட்டாரப் பகுதிகளுக்கு வானிலை ஆய்வு மையம் அதிதீவிர கனமழை எச்சரிக்கை (Red Alert) விடுத்துள்ளது. இதனால் அசம்பாவிதங்களைத் தவிர்க்க, பொதுமக்கள் யாரும் மழைக்காலங்களில் தங்களின் வாகனங்களை பலவீனமான பழைய மரங்களின் கீழ் நிறுத்த வேண்டாம் என்றும், மரங்களின் அடியில் தஞ்சம் புக வேண்டாம் என்றும் மாவட்ட நிர்வாகம் அவசரக் கேட்டுக்கொண்டுள்ளது.

Advertisement
Continue Reading
Advertisement

Copyright © 2023 www.cinefeeds.in