CRIME
“ஆஸ்திரேலியாவில் பயங்கரம்..” விசாகப்பட்டினம் தொழிலதிபர் கண் முன்னே துடிதுடித்த மனைவி-மருமகள்.. சுபநிகழ்ச்சிக்குச் சென்ற இடத்தில் நேர்ந்த கொடூரம்..!!
ஆஸ்திரேலியாவின் மெல்போர்ன் நகரில் நிகழ்ந்த பயங்கர கார் விபத்தில், விசாகப்பட்டினத்தைச் சேர்ந்த மாமியாரும் மருமகளும் சம்பவ இடத்திலேயே பரிதாபமாக உயிரிழந்தனர். விசாகப்பட்டினத்தைச் சேர்ந்த வி.டி.சி.ஏ முன்னாள் இணைச் செயலாளர் ஜி.டி. பிரசாத், அங்குள்ள தங்களது குடும்ப சுபநிகழ்ச்சி ஒன்றில் பங்கேற்பதற்காகத் தனது மனைவி மற்றும் குடும்பத்தினருடன் ஆஸ்திரேலியா சென்றிருந்தார். அவர்கள் மெல்போர்னின் பாயிண்ட் குக் பகுதியில் ஒரு டொயோட்டா காரில் பயணம் செய்து கொண்டிருந்தபோது, அதிவேகமாக வந்த ஆடம்பர போர்ஷே கார் ஒன்று இவர்களது வாகனத்தின் மீது மிகக் கொடூரமாக மோதி விபத்துக்குள்ளானது.
இந்த அதிர்ச்சிகரமான விபத்தில், ஜி.டி. பிரசாத்தின் மனைவியான ரமாதேவி (67) மற்றும் அவரது மருமகள் நேகா பொம்மாலி (33) ஆகிய இருவரும் சம்பவ இடத்திலேயே உடல் நசுங்கி உயிரிழந்தனர். இவர்களது காரை ஓட்டிச் சென்ற ஓட்டுநர் படுகாயமடைந்ததைத் தொடர்ந்து, அவர் உடனடியாக மீட்கப்பட்டு சிகிச்சைக்காக மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். தனது கண் எதிரே மனைவியும் மருமகளும் துடிதுடித்து உயிரிழந்ததைக் கண்ட ஜி.டி. பிரசாத், மீளாத் துயரத்திலும் கடுமையான அதிர்ச்சியிலும் உறைந்து போயுள்ளார். இந்த விபத்து குறித்து ஆஸ்திரேலிய காவல்துறையினர் வழக்குப் பதிவு செய்து தீவிர விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்
