“ஐயோ கொடுமையே.. நாளை முகூர்த்தம்.. இன்று சடலம்..” மணமகன் கண் முன்னே ரத்த வெள்ளத்தில் துடிதுடித்த மணப்பெண்.. நெஞ்சை உலுக்கும் சோக சம்பவம்..!! – cinefeeds
Connect with us

CRIME

“ஐயோ கொடுமையே.. நாளை முகூர்த்தம்.. இன்று சடலம்..” மணமகன் கண் முன்னே ரத்த வெள்ளத்தில் துடிதுடித்த மணப்பெண்.. நெஞ்சை உலுக்கும் சோக சம்பவம்..!!

Published

on

திண்டுக்கல் மாவட்டம் வெள்ளோடு பகுதியைச் சேர்ந்த இந்திய ராணுவ வீரர் ஜெபபாஸ்டின் என்பவருக்கும், காமலாபுரம் சக்கையா நாயக்கனூரைச் சேர்ந்த மரிய வெல்சியாஎன்ற பெண்ணுக்கும் செப்டம்பர் 13 அன்று திருமணம் நடைபெற இருந்த நிலையில், மணமகன் கண் முன்னாலேயே மணப்பெண் விபத்தில் சிக்கி பரிதாபமாக உயிரிழந்த துயரச் சம்பவம் அரங்கேறியுள்ளது. மதுரையில் நடைபெற இருந்த செவிலியர் தேர்வை எழுதுவதற்காக, மணமகள் வெல்சியாவை ஜெபபாஸ்டின் தனது இருசக்கர வாகனத்தில் ஏற்றிக்கொண்டு அதிகாலையில் மதுரை நோக்கிச் சென்று கொண்டிருந்தார். இன்று அதிகாலை சுமார் 3 மணியளவில் திண்டுக்கல் – மதுரை தேசிய நான்கு வழிச்சாலையில் வாடிப்பட்டி அருகே அவர்கள் சென்றுகொண்டிருந்தபோது, கோவையிலிருந்து மதுரை நோக்கி வந்த காரின் முன்புற டயர் திடீரென வெடித்துக் கட்டுப்பாட்டை இழந்து இவர்களது இருசக்கர வாகனத்தின் மீது பயங்கரமாக மோதியது.

இந்தக் கொடூர விபத்தில் இருவரும் தூக்கி வீசப்பட்டதில், மணமகள் மரிய வெல்சியா சம்பவ இடத்திலேயே பரிதாபமாகத் துடிதுடித்து உயிரிழந்தார். விபத்தில் படுகாயமடைந்த மணமகன் ஜெபபாஸ்டின் உடனடியாக மீட்கப்பட்டு, மேல் சிகிச்சைக்காக மதுரை அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். இச்சம்பவம் குறித்து வாடிப்பட்டி காவல்துறையினர் வழக்குப் பதிவு செய்து தீவிர விசாரணை நடத்தி வரும் நிலையில், நாளை திருமணம் நடக்கவிருந்த தேவாலயத்தில் மணமகள் சடலமாக வரும் அவலம் அப்பகுதி மக்களிடையே பெரும் சோகத்தையும் கண்ணீரையும் ஏற்படுத்தியுள்ளது.

Advertisement
Continue Reading
Advertisement

Copyright © 2023 www.cinefeeds.in