“5 வருஷம் முடிஞ்சுச்சா…? பைலை தூக்க வேண்டிய நேரம் வந்தாச்சு…” ஊழியர்களுக்கு அரசு வைத்த ‘செக்’..!! – cinefeeds
Connect with us

LATEST NEWS

“5 வருஷம் முடிஞ்சுச்சா…? பைலை தூக்க வேண்டிய நேரம் வந்தாச்சு…” ஊழியர்களுக்கு அரசு வைத்த ‘செக்’..!!

Published

on

ஒரே இடத்தில் 5 ஆண்டுகளுக்கு மேல் பணியாற்றுவோரைக் கணக்கெடுத்து பணியிட மாற்றம் செய்ய நடவடிக்கை எடுக்கப்பட்டு உள்ளது. இது குறித்து தமிழக அரசின் பணியாளர் மற்றும் சீர்திருத்தத் துறை சார்பில் அனைத்துத் துறைச் செயலர்கள் மற்றும் இயக்குநர்களுக்கு சுற்றறிக்கை அனுப்பப்பட்டு உள்ளது. அதில், நிர்வாக அலுவலர், இளநிலை நிர்வாக அலுவலர், அலுவலகக் கண்காணிப்பாளர், உதவியாளர் ஆகிய பணியிடங்களில் உள்ள ஊழியர்கள், ஒரே இடத்தில் தொடர்ந்து 5 ஆண்டுகளுக்கு மேலாகவோ அல்லது 10 ஆண்டுகளுக்கு மேலாகவோ பணியாற்றி வருகிறார்களா என்ற முழு விவரங்களையும் சேகரித்து வரும் செப்டம்பர் 23-ஆம் தேதிக்குள் சமர்ப்பிக்க வேண்டும் என்று தெரிவிக்கப்பட்டு உள்ளது.

பதவி உயர்வில் வேறு இடங்களுக்கு மாற்றப்பட்டு, பின்னர் பழைய பணியிடத்துக்கே திரும்பி வந்தவர்கள் யார், அவர்கள் எப்போது திரும்பினார்கள், அதற்கான காரணம் என்ன என்ற விவரங்களையும் கட்டாயம் அறிக்கையில் சேர்க்க வேண்டும் எனத் தெரிவிக்கப்பட்டு உள்ளது. மேலும், இது மிகவும் அவசரமானது என்றும் சுற்றறிக்கையில் அடிக்கோடிட்டுக் காட்டப்பட்டு உள்ளது. அரசு விதிகளின்படி, பதவி உயர்வு வரும்போது ஊழியர்கள் வேறு இடங்களுக்கு மாற்றப்படுவது வழக்கம். ஆனால், சிலர் பதவி உயர்வு பெற்று வேறு ஊருக்குச் சென்று சில நாட்களிலேயே, நிர்வாகக் காரணங்களைக் காட்டி அல்லது தற்காலிகப் பணிமாற்றம் மூலமாக மீண்டும் பழைய இடத்துக்கே திரும்பி விடுகின்றனர்.

Advertisement

இத்தகைய உத்திகளைக் கையாண்டு பழைய இடத்திலேயே தொடர்ந்து நீடிக்கும் நபர்களையும் அரசு குறிவைத்துள்ளது. ஓர் அரசு ஊழியர் ஒரே இடத்தில், குறிப்பாகக் கணக்கு மற்றும் நிர்வாகப் பிரிவுகளில் பல ஆண்டுகள் தொடர்ந்து நீடித்தால் நிர்வாகத்தில் பல்வேறு சிக்கல்கள் எழுகின்றன. ஒரே இடத்தில் நீண்ட காலம் இருப்பதால் புதிய மாற்றங்கள் ஏற்படுவதில்லை. பொதுமக்கள் மற்றும் ஒப்பந்ததாரர்களுடன் நெருங்கிய தொடர்பு ஏற்பட்டு, முறைகேடுகள் மற்றும் ஊழல் நடப்பதற்கான வாய்ப்புகள் அதிகம் என அரசு கருதுகிறது. எனவே, 5 ஆண்டுகளுக்கு மேலாக ஒரே இடத்தில் பணியாற்றுவோர் பட்டியலைத் தயாரித்து உடனடியாக இடமாற்றம் செய்ய அரசு முடிவு செய்துள்ளது.

Advertisement
Continue Reading
Advertisement

Copyright © 2023 www.cinefeeds.in