LATEST NEWS
“ஐயோ நெஞ்சே வெடிச்சிடும் போல… சாகுறதுக்கு முன்னாடி அம்மா கேட்ட ஒரே விஷயம்.. தாயோட கடைசி ஆசையை நிறைவேத்திட்டு கதறி அழுத மகள்..!!
அமெரிக்காவின் புளோரிடா மாநிலத்தில், 81 வயதான டோன்னா கம்மிங்ஸ், Stage 4 கல்லீரல் புற்றுநோயால் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்தார். அவர் தனது மகள் கேமி கம்மிங்ஸ் அவரது காதலர் சேண்டி ஆடம்ஸை திருமணம் செய்துகொள்ளவேண்டும் என்பதே தனது கடைசி ஆசை என தெரிவித்தார்.
அந்த விருப்பத்தை நிறைவேற்ற, காமி தனது தாயின் ICU படுக்கையருகே திருமணம் செய்து கொண்டார். மருத்துவமனை ஊழியர்கள் ICU அறையை அழகாக அலங்கரித்து, கேக் மற்றும் பானங்களுடன் சிறிய குடும்ப விழாவை ஏற்பாடு செய்தனர். கேமி, “என் தாயார் எப்போதும் சேண்டியை என் தேவதை என்று அழைத்தார். அவர் நான் திருமணம் செய்து கொண்டதை பார்க்க வேண்டும் என்பதே அவரது ஆசை” என்று கூறினார். மேலும், “என் தாயார் எங்கள் குடும்பத்திற்காக பல தியாகங்கள் செய்தார். அவரின் இறுதி நாட்களில் அவரை மகிழ்விக்க இது தான் நான் செய்யக்கூடிய சிறந்த விடயம்” என்று உணர்ச்சியுடன் தெரிவித்தார்.
திருமண விழாவுக்குப் பிறகு, டோன்னா ICU-வில் உயிரிழந்தார். கேமி, “இப்போது என் தாயார் வலியின்றி அமைதியாக இருக்கிறார்” என்று கூறினார். கேமி மற்றும் சேண்டி, வரும் ஏப்ரல் மாதத்தில் நண்பர்கள் மற்றும் உறவினர்களுடன் பெரிய திருமண விழாவை நடத்த திட்டமிட்டுள்ளனர். இந்த நிகழ்வு, தாயின் இறுதி விருப்பத்தை நிறைவேற்றும் மகளின் அன்பை வெளிப்படுத்தும் உணர்ச்சிகரமான கதையாக உலகம் முழுவதும் பரவிவருகிறது.
