LATEST NEWS
“இனி எப்படி காப்பாற்றுவேன்..?” சிறுநீரக நோயாளி மனைவியின் மருத்துவப் பணம் வெள்ளத்தில் அடித்துச் செல்லப்பட்ட கொடூரம்.. கண்ணீர் விட்டும் கதறும் கணவன்.. நெட்டிசன்களை உருக வைத்த வீடியோ..!!
நேபாளப் பெருவெள்ளத்தின் கொடூரப் பிடியில் சிக்கி, சிறுநீரகச் செயலிழப்பால் பாதிக்கப்பட்ட தனது மனைவியின் அவசரச் சிகிச்சைக்காகச் சிறுகச் சிறுகச் சேமித்து வைத்திருந்த ரூ.25 லட்சம் ரொக்கப் பணம், தங்கம் மற்றும் வெள்ளி நகைகள் என அனைத்தையும் ஒரே நொடியில் வெள்ள நீர் அடித்துச் சென்றதால், ரசுவா பேத்ராவதி பகுதியைச் சேர்ந்த கணவர் ஒருவர் நடுத்தெருவில் நின்றுகொண்டு கண்ணீர் விட்டு கதறும் நெஞ்சை உலுக்கும் வீடியோ சமூக வலைத்தளங்களில் வைரலாகி வருகிறது.
https://twitter.com/omnamosivaye/status/2093578411390500893/video/1
கண் இமைக்கும் நேரத்தில் தங்களது ஒட்டுமொத்த வாழ்வாதாரத்தையும், உயிரைக் காக்க வச்சிருந்த மருத்துவப் பணத்தையும் இயற்கைச் சீற்றம் பறித்துச் சென்ற ‘அந்த’ ஒற்றை நொடிக் காரிருளில், அக்குடும்பமே தற்போது நிலைகுலைந்து போயுள்ளது. “பாதிக்கப்பட்டவர்கள் இப்போது யாருடைய வலியைப் புரிந்துகொள்வார்கள்? எங்கள் ஒட்டுமொத்த வாழ்க்கையுமே சுடுகாடாக மாறிவிட்டதே!” என்று அந்தத் கணவன் மரண பயத்தில் வார்த்தைகளே இன்றித் தேம்பி அழும் இந்த விபரீதக் காட்சி ஒட்டுமொத்த மனிதநேயத்தையே உலுக்கியுள்ளது.
