LATEST NEWS
கூரையை பிச்சிகிட்டு வந்த அதிர்ஷ்டம்..! இது வேண்டாம் என லாட்டரி சீட்டை குப்பையில் வீசிய பெண்… 2 நாட்களுக்கு பிறகு நடந்த அதிர்ச்சி திருப்பம்.. ஒரே நாளில் கோடீஸ்வரி ஆன சம்பவம்..!!
இத்தாலியில் ரூ.10.9 கோடி மதிப்பிலான லாட்டரி பரிசு விழுந்த சீட்டை தவறுதலாக குப்பையில் வீசிய பெண், இரண்டு நாட்களுக்குப் பிறகு அதனை மீட்டெடுத்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. பிடோண்டோ நகரைச் சேர்ந்த அந்தப் பெண், லாட்டரி சீட்டை ஸ்கேன் செய்தபோது ‘Non-payable’ என வந்ததால் பரிசு கிடைக்கவில்லை என நினைத்து அதை குப்பையில் வீசியுள்ளார்.
பின்னர் குடும்பத்தினர் லாட்டரி முடிவுகளைச் சரிபார்த்தபோது, அந்தப் பெண் வழக்கமாகத் தேர்வு செய்யும் 2, 4, 8, 10, 51 ஆகிய எண்களுக்கு €1 மில்லியன் பரிசு விழுந்தது தெரியவந்தது. இதனால் அதிர்ச்சியடைந்த குடும்பத்தினர், குப்பை லாரியில் ஏற்றிச் செல்லப்பட்ட லாட்டரி சீட்டைத் தேடும் பணியில் இறங்கினர்.
ஒரு நாளுக்கும் மேலாக குப்பைகளுக்குள் தீவிரமாகத் தேடிய தூய்மைப் பணி ஊழியர்கள், அதிர்ஷ்ட சீட்டை எந்தவித சேதமும் இல்லாமல் மீட்டெடுத்தனர். இதையடுத்து உரிய நடைமுறைகளுக்குப் பிறகு அந்தப் பெண்ணுக்கு ரூ.10.9 கோடி மதிப்பிலான பரிசுத் தொகை வழங்கப்பட்டது. குப்பையில் வீசப்பட்ட லாட்டரி சீட்டு மீண்டும் கைக்கு வந்த சம்பவம் தற்போது பேசுபொருளாகியுள்ளது.
