LATEST NEWS
“நெஞ்சு வெடிச்சிரும்…” சட்டப்பேரவையில் அனல் பறந்த விஜய் பேச்சுக்கு… ‘சுறா’ மீம்ஸ் போட்டு இன்ஸ்டாகிராமில் கலாய்த்த உதயநிதி ஸ்டாலின்..!!
தமிழ்நாடு சட்டப்பேரவையில் முதலமைச்சர் விஜய் திமுக மீது ஆக்ரோஷமாகப் பல குற்றச்சாட்டுகளை முன்வைத்து உரையாற்றினார். அவரது இந்த ஆவேசமான பேச்சு அரசியல் வட்டாரத்தில் பெரும் பரபரப்பை ஏற்படுத்திய நிலையில், சமூக வலைத்தளங்களிலும் இது விவாதப் பொருளானது.
இதற்குப் பதிலடி கொடுக்கும் வகையில், எதிர்க்கட்சித் தலைவர் உதயநிதி ஸ்டாலின் தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் நடிகர் விஜய் நடித்த ‘சுறா’ திரைப்படத்தின் பிரபல நகைச்சுவைக் காட்சி ஒன்றை ஸ்டோரியாகப் பகிர்ந்துள்ளார். அதில் மூச்சு விடாமல் பாடும் வெண்ணிற ஆடை மூர்த்தியைப் பார்த்து, நடிகர் வடிவேலு ‘நெஞ்சு வெடித்துவிடும்’ எனக் கூறுவது போன்ற காட்சி இடம் பெற்றுள்ளது.
முதலமைச்சர் விஜயின் அசுர வேக ஆவேசப் பேச்சை மறைமுகமாகக் கிண்டல் செய்யும் வகையிலேயே உதயநிதி இந்த மீம் வீடியோவைப் பகிர்ந்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது. இதன் மூலம் சட்டப்பேரவைக்கு வெளியேயும் திமுக – தமிழக வெற்றிக் கழகம் இடையேயான அரசியல் மோதல் மற்றும் சமூக ஊடகப் போர் புதிய கட்டத்தை எட்டியுள்ளது.
