“நியூ மெக்ஸிகோ… ஹார்முஸ் நீரிணை… இப்போ நிலவா..? ட்ரூத் சோஷியல்’ல டிரம்ப் செய்த தரமான சம்பவம்… கன்ஃபுயூஸ் ஆன உலக நாடுகள்..!! – cinefeeds
Connect with us

LATEST NEWS

“நியூ மெக்ஸிகோ… ஹார்முஸ் நீரிணை… இப்போ நிலவா..? ட்ரூத் சோஷியல்’ல டிரம்ப் செய்த தரமான சம்பவம்… கன்ஃபுயூஸ் ஆன உலக நாடுகள்..!!

Published

on

அமெரிக்க முன்னாள் அதிபர் டொனால்ட் டிரம்ப், பூமியை கடந்து நிலவைக் கையகப்படுத்தும் முயற்சியில் தற்போது இறங்கியுள்ளார். இதன் தொடக்கமாக, நிலவில் அமெரிக்கக் கொடி நாட்டப்பட்டிருப்பது போன்ற ஒரு ஏஐ புகைப்படத்தை தனது ‘ட்ரூத் சோஷியல்’ சமூக வலைத்தளப் பக்கத்தில் அவர் பகிர்ந்துள்ளார். இந்த விண்வெளி சார்ந்த உரிமை கோரல் பதிவு, சர்வதேச அளவில் பெரும் அதிர்வலைகளை ஏற்படுத்திய தோடு, நிலவின் இறையாண்மை குறித்து ஒரு புதிய விவாதத்தையும் தூண்டியுள்ளது.

சர்வதேச அளவில் முக்கியத்துவம் வாய்ந்த ஹார்முஸ் நீரிணையின் பெயரை மாற்றுவது மற்றும் நியூ மெக்ஸிகோ மாநிலத்தின் பெயரை மாற்றுவதற்கான முன்மொழிவு என டிரம்ப் அண்மைக்காலமாகத் தெரிவித்து வரும் சர்ச்சைக்குரியக் கருத்துகளின் வரிசையில் இந்தப் பதிவும் இணைந்துள்ளது. புவிசார் அரசியல் மற்றும் உலக நாடுகளுக்கிடையேயான எல்லைப் பகுதிகள் குறித்து அவர் கூறிவரும் பரபரப்பான கருத்துக்கள், அமெரிக்கா மட்டுமின்றி உலக நாடுகளின் கவனத்தையும் அவர் பால் திருப்பியுள்ளது.

Advertisement
Continue Reading
Advertisement

Copyright © 2023 www.cinefeeds.in