LATEST NEWS
மாஸ் ..! சாக்கடைத் தண்ணீரிலிருந்து மின்சாரம்… அமெரிக்காவை மிரள வைத்த இந்திய வம்சாவளி சிறுவன்! உலகை உலுக்கிய ‘பேட்டரி’ சாதனை..!!
அமெரிக்காவில் வசிக்கும் பிரகர் புரோஹித் என்ற இந்திய வம்சாவளி சிறுவன், மாசடைந்த சாக்கடைத் தண்ணீரிலிருந்து மின்சாரம் தயாரித்துச் சிறிய பேட்டரிகளை உருவாக்கும் அதிநவீன கண்டுபிடிப்பை நிகழ்த்தி உலகளவில் பெரும் சாதனை படைத்துள்ளார். இவரது இந்த புதுமையான சுற்றுச்சூழல் அறிவியல் திட்டத்திற்கு, அமெரிக்காவின் மதிப்புமிக்க அறிவியல் விருதான “3M இளம் விஞ்ஞானி சவால்” விருதும், 2026-ஆம் ஆண்டிற்கான மாநில அளவிலான தகுதி விருதும் வழங்கிக் கௌரவிக்கப்பட்டுள்ளது.
உலகம் முழுவதும் தண்ணீர் தட்டுப்பாடு மற்றும் சுற்றுச்சூழல் மாசு போன்ற அச்சுறுத்தல்கள் நிலவி வரும் நிலையில், மாசடைந்த நீரையே ஒரு எரிபொருளாக மாற்றிப் பயன்படுத்த முடியும் என்பதைப் பிரகர் தனது புராஜெக்ட் மூலம் நிரூபித்துள்ளார். “டெய்னி பேட்டரீஸ் ஃபிரம் டர்ட்டி வாட்டர்” என்று பெயரிடப்பட்டுள்ள இவரது இந்த ஆய்வானது, ஒரே நேரத்தில் நீர் மாசடைதல் மற்றும் மின்சாரப் பற்றாக்குறை ஆகிய இரு பெரும் உலகளாவிய பிரச்சினைகளுக்கு மிக எளிய முறையில் தீர்வு காண்கிறது.
மிகப் பெரிய அறிவியல் கண்டுபிடிப்புகள் யாவும் விலையுயர்ந்த ஆய்வகங்களிலோ அல்லது கடினமான உபகரணங்களிலோதான் தொடங்க வேண்டும் என்பதில்லை; அன்றாடப் பிரச்சினைகளை மாற்றுப் பார்வையில் அணுகினாலே சாதிக்கலாம் என்பதற்குப் பிரகரின் இந்த முயற்சி ஒரு சிறந்த எடுத்துக்காட்டாகும். குப்பை மற்றும் கழிவுப் பொருட்களிலிருந்து பயனுள்ள சிறிய அளவிலான மின்னாற்றலை உருவாக்க முடியும் என்ற இவரது எளிய பொறியியல் சிந்தனையைப் பாராட்டி, அமெரிக்கா முழுவதும் உள்ள விஞ்ஞானிகளும் நெட்டிசன்களும் இந்த இளம் விஞ்ஞானிக்குத் தங்களது வாழ்த்துக்களைக் குவித்து வருகின்றனர்.
