LATEST NEWS
“கால்நடை தீவனம் விற்று மகனை டாக்டராக்கிய தாய் ” என் முதல் மாத சம்பளத்தை என்ன செய்வ அம்மா…? டாக்டர் மகனின் நெகிழ்ச்சி கேள்வி… இணையத்தை உருக வைத்த வைரல் வீடியோ..!!
வறுமையும் கடின உழைப்பும் ஒருபோதும் லட்சியத்திற்குத் தடையாகாது என்பதை நிரூபிக்கும் வகையில், கால்நடைகளுக்கான தீவனம் விற்றுத் தனது மகனை மருத்துவராக்கிய தாய் ஒருவரின் நெகிழ்ச்சியான வீடியோ இணையத்தில் வைரலாகி வருகிறது. ‘டாக்டர் ராம் லால் போய்’ என்ற எம்பிபிஎஸ் மாணவர், சாலையோரத்தில் தீவனம் விற்றுக்கொண்டிருக்கும் தனது தாயுடன் இணைந்து இந்த வீடியோவைப் பதிவிட்டுள்ளார். “இவர்தான் என் அம்மா, தீவனம் விற்றுத்தான் என்னை இந்த அளவுக்குப் படிக்க வைத்து மருத்துவர் ஆக்கியுள்ளார்” என்று பெருமையுடன் தன் தாயை உலகிற்கு அறிமுகப்படுத்துகிறார்.
https://www.instagram.com/reel/DaFMbDcK0V_/?utm_source=ig_web_button_share_sheet
அந்த வீடியோவில், இன்னல்கள் பல கடந்துவந்த அந்தத் தாய், தன் மகன் மருத்துவராகிவிட்டான் என்ற மட்டற்ற மகிழ்ச்சியில் முகமெல்லாம் புன்னகையோடு காட்சியளிக்கிறார். இன்னும் ஒரு வருடத்தில் தனது படிப்பு முடிவடைய உள்ளதாகக் கூறும் ராம், “நான் வாங்கப் போகும் சம்பளத்தை வைத்து என்ன செய்வாய் அம்மா?” என்று கேட்க, அதற்கு தாய் அன்போடு பதிலளிக்கிறார். மேலும், தனது தாயின் கடைக்கு வரும் வாடிக்கையாளர்களிடம் நெகிழ்ச்சியாகப் பேசும் ராம், பிள்ளைகள் அனைவரும் தங்கள் பெற்றோரின் கஷ்டத்தையும் தியாகத்தையும் புரிந்து கொண்டு அவர்களை மதிக்க வேண்டும் என்றும், குடும்பத்திற்காக நேரம் ஒதுக்க வேண்டும் என்றும் உருக்கமாகக் கேட்டுக்கொள்கிறார்.
சமூக வலைதளங்களில் வெளியாகிப் பெரும் வரவேற்பைப் பெற்றுள்ள இந்த வீடியோவைக் கண்டு நெட்டிசன்கள் பலரும் தங்களது நெகிழ்ச்சியான கருத்துகளைப் பதிவிட்டு வருகின்றனர். “பெற்றோரின் கஷ்டத்தைப் புரிந்து கொண்டு படித்து முன்னேறிய இந்த மகன்தான் உலகிலேயே மிகப்பெரிய பணக்காரர்” என்றும், “மருத்துவர் ஆன பிறகும் தாயின் உழைப்பையும் தொழிலையும் மதிக்கத் தவறாத குணம் பாராட்டத்தக்கது” என்றும் நெட்டிசன்கள் தங்களது மனமார்ந்த வாழ்த்துகளைத் தெரிவித்து வருகின்றனர்.
