LATEST NEWS
“என் மகனை சர்க்கஸில் விற்க மாட்டேன்..!” வறுமையின் உச்சத்தில் தந்தையின் வைராக்கியம்… ஆனா இன்று கெத்து காட்டும் நிஜ ஹீரோ… உலகை திரும்பிப் பார்க்க வைத்த நெகிழ்ச்சிச் சம்பவம்..!!
சர்க்கஸில் விற்க முன்வந்தபோதும் மகனின் எதிர்காலத்திற்காக மறுத்துவிட்ட தந்தையின் உறுதியால் வாழ்க்கைப் பாதை மாறிய குஜராத் மாநிலம் பாவன்கரைச் சேர்ந்த டாக்டர் கணேஷ் பாரையா, வெறும் 3 அடி உயரமும் 72 சதவீத மாற்றுத்திறனும் கொண்டிருந்த போதிலும் கடுமையான போராட்டங்களுக்குப் பிறகு நீட் தேர்வில் வெற்றி பெற்று மருத்துவப் படிப்பை முடித்துள்ளார்; உடல் அமைப்பைக் காரணம் காட்டி அவருக்கு எம்பிபிஎஸ் கல்விக்கு அனுமதி மறுக்கப்பட்டபோது, குஜராத் உயர்நீதிமன்றம் முதல் உச்சநீதிமன்றம் வரை சட்டப் போராட்டம் நடத்தி தீர்ப்பைப் பெற்று தனது திறமையை நிரூபித்துள்ளார்.
सर्कस वालों ने पिता से कहा था…इसे हमें दे दो…5 लाख देंगे।
लेकिन पिता ने कहा…नहीं, मुझे अपने बेटे को पढ़ाना है।
यही वो फैसला था…जिसने एक बच्चे की तकदीर बदल दी।
गुजरात के भावनगर के रहने वाले Dr. Ganesh Baraiya…
जिन्हें बचपन में लोग उनकी कद-काठी के कारण अलग नजरों से… pic.twitter.com/9y4mX73ujo— Sunil Kumar (@sunilku20403616) August 13, 2026
மனிதனின் திறமையை அவனது உடலைக் கொண்டு அளவிடும் சமூகத்தின் குறுகிய பார்வைக்குச் சாட்டையடி கொடுத்துள்ள இவர், சமீபத்தில் ‘கெளன் பனேகா கரோடபதி’ மேடையில் அமிதாப் பச்சன் முன்னிலையில் தனது உத்வேகக் கதையைப் பகிர்ந்து அனைவரின் கண்களையும் குளிரச் செய்துள்ளார்; உயரத்தை விட மனிதனின் ஊக்கமும் தன்னம்பிக்கையுமே வாழ்க்கையில் வெற்றி பெற முக்கியம் என்பதை இவரின் இந்த எழுச்சிமிகு பயணம் ஒட்டுமொத்த உலகத்திற்கும் உணர்த்தியுள்ளது.
