“ஐயோ ராஜா காடு இல்லை… இது கான்கிரீட் வீடு..” வீட்டின் மாடியில் ஜாலியாக ஓய்வெடுக்கும் சிங்க குடும்பம்.. நெஞ்சை தத்தளிக்க வைக்கும் வைரல் வீடியோ..!! – cinefeeds
Connect with us

LATEST NEWS

“ஐயோ ராஜா காடு இல்லை… இது கான்கிரீட் வீடு..” வீட்டின் மாடியில் ஜாலியாக ஓய்வெடுக்கும் சிங்க குடும்பம்.. நெஞ்சை தத்தளிக்க வைக்கும் வைரல் வீடியோ..!!

Published

on

குஜராத் மாநிலம் கிர் சோம்நாத் மாவட்டத்தில் உள்ள ஜுண்ட் கிராமத்தில் பெய்த கனமழையின் போது, யாரும் எதிர்பாராத வகையில் ஒரு வீட்டின் மொட்டை மாடிக்கு மேல் சிங்கங்கள் தஞ்சம் புகுந்த அதிர்ச்சிச் சம்பவம் அப்பகுதி மக்களைப் பீதியில் ஆழ்த்தியுள்ளது. கொட்டித் தீர்த்த மழையிலிருந்து தங்களைக் காத்துக் கொள்வதற்காக, ஒரு ஆண் சிங்கம், மூன்று பெண் சிங்கங்கள் மற்றும் இரண்டு குட்டிகள் என மொத்தம் 6 சிங்கங்கள் கொண்ட ஒரு முழு சிங்கக் குடும்பமே அந்த வீட்டின் மொட்டை மாடியில் ஏறி மிக சாதாரணமாக ஓய்வெடுத்துக் கொண்டிருந்தன.

மதிய நேரம் வரை அந்தச் சிங்கக் குடும்பம் வீட்டின் மொட்டை மாடியிலேயே அமர்ந்திருந்த இந்த விசித்திரமான காட்சியை, அங்கிருந்தவர்கள் தங்களின் மொபைல் கேமராவில் வீடியோவாகப் பதிவு செய்துள்ளனர். சிங்கங்கள் தங்களின் வீட்டின் மேல் ஏறி அமர்ந்திருப்பதைப் பார்த்த வீட்டு உரிமையாளர்களும் கிராம மக்களும் கடுமையான அச்சத்திலும் கவலையிலும் உறைந்து போயினர். பார்ப்பவர்களைத் திகைக்க வைக்கும் இந்த அரிய மற்றும் அதிர்ச்சியூட்டும் சிங்கம் குடும்பத்தின் வீடியோ தற்போது சமூக வலைதளங்களில் வெளியாகி மிக வேகமாக வைரலாகி வருகிறது

Advertisement
Continue Reading
Advertisement

Copyright © 2023 www.cinefeeds.in