“என்னை கல்யாணம் பண்ணிக்கிறியா..?” சுறா மீன்கள் நடுவே காதலை சொன்ன காதலன்.. சர்ப்ரைசில் உறைந்துபோன காதலி..! வீடியோவை பார்த்து வியந்த நெட்டிசன்கள்.!! – cinefeeds
Connect with us

LATEST NEWS

“என்னை கல்யாணம் பண்ணிக்கிறியா..?” சுறா மீன்கள் நடுவே காதலை சொன்ன காதலன்.. சர்ப்ரைசில் உறைந்துபோன காதலி..! வீடியோவை பார்த்து வியந்த நெட்டிசன்கள்.!!

Published

on

இங்கிலாந்தின் வென்டோவர் பகுதியைச் சேர்ந்த ஜேம்ஸ் வால்ஷ் என்பவரும் பேஜ் குக் என்பவரும் நீண்ட நாட்களாக காதலித்து வருகின்றனர். பேஜ் குக் என்பவருக்கு கடல் வாழ் உயிரினமான சுறா மீன்கள் என்றால் அலாதி பிரியம். காதலியின் விருப்பத்தை நன்கு அறிந்த ஜேம்ஸ், கிறிஸ்மஸ் பரிசாக ஸ்கெக்னஸ் அக்குவாரியத்தில் உள்ள சுறா மீன்களுடன் நீந்தும் அனுபவத்திற்கான டிக்கெட்டை அவருக்குப் பரிசளித்திருந்தார். பின்னர் அதே இடத்திலேயே தனது திருமண முன்மொழிவைச் செய்ய முடிவு செய்த ஜேம்ஸ், அக்குவாரியம் ஊழியர்களின் உதவியுடன் ரகசியமாகத் திட்டமிட்டார்.

திட்டமிட்டபடி இருவரும் டைவிங் உடைகளை அணிந்து கொண்டு சுறா மீன்கள் நிறைந்த பிரம்மாண்ட தொட்டிக்குள் இறங்கினர். மற்ற நபர்களிடம் இருந்து இருவரையும் சற்றே தனியாக அழைத்துச் சென்ற அக்குவாரியம் ஊழியர்கள், ஜேம்ஸ் வைத்திருந்த “என்னைத் திருமணம் செய்து கொள்வாயா?” என்ற வாசகம் அடங்கிய பலகையை கொண்டு வந்து கொடுத்தனர். உடனே ஜேம்ஸ் தனது வெட்சூட் உடைக்குள் மறைத்து வைத்திருந்த நிச்சயதார்த்த மோதிரத்தை எடுத்து காதலிக்கு காண்பித்துத் தனது காதலை தெரிவித்தார்.

Advertisement

சுறா மீன்கள் தங்களை சுற்றி நீந்திக்கொண்டிருந்த சூழலில், எதிர்பாராத இந்த சம்பவத்தை கண்ட பேஜ் குக் அதிர்ச்சியிலும் ஆனந்தத்திலும் உறைந்து போனார். இதுகுறித்து பேசிய பேஜ் குக், “எனக்கு இந்த அனுபவம் முற்றிலும் எதிர்பாராத ஒன்று. அந்த தருணத்தில் நிலவிய அதிர்ச்சியில், எனக்கு மூச்சுத்திணறல் ஏற்பட்டு காற்றடைப்பு உண்டாகிவிடுமோ என்றுதான் முதலில் பயந்தேன்” என தனது அனுபவத்தை பகிர்ந்துகொண்டார். சமூக வலைத்தளங்களில் வைரலாகி வரும் அந்த வீடியோவில், ஜேம்ஸ் தனது காதலை தெரிவித்ததும், பேஜ் குக் தனது முகத்தை மூடிக்கொண்டு ஆச்சரியப்படுவதும், பின்னர் ஸ்கூபா டைவிங் முறையிலான ‘ஓகே’ கை சைகையை காட்டி தனது சம்மதத்தை தெரிவிப்பதும் பதிவாகியுள்ளது. நீரடிச் சூழலிலும் சுறாக்கள் சுழன்றடிக்கும் இடத்திலும் நடந்த இந்தத் திருமண முன்மொழிவு நிகழ்வு, காண்போரையும் வியப்பில் ஆழ்த்தியுள்ளது.

Advertisement
Continue Reading
Advertisement

Copyright © 2023 www.cinefeeds.in