“கார்டு ரகசியமா லஞ்சம் வாங்குறாரு..!” வீடியோ எடுத்து மாட்டிவிட நினைத்த பயணி.. ஆனா இறுதியில் வெளிவந்த அதிர்ச்சி உண்மை..!! – cinefeeds
Connect with us

CRIME

“கார்டு ரகசியமா லஞ்சம் வாங்குறாரு..!” வீடியோ எடுத்து மாட்டிவிட நினைத்த பயணி.. ஆனா இறுதியில் வெளிவந்த அதிர்ச்சி உண்மை..!!

Published

on

குஜராத் மாநிலம், வடோதரா அருகில் உள்ள ஒரு கிராமத்தில் பயணிகள் ரயில் ஒன்று வந்து நிற்பதும், அங்குள்ள மக்கள் ரயிலின் கார்டிடம் பணம் கொடுத்துவிட்டு அவரது கேபினிலும், பொதுப் பெட்டியிலும் ஏறி அமரும் காட்சிகளும் அடங்கிய வீடியோ ஒன்று சமூக வலைதளங்களில் வெளியாகிப் பெரும் விசித்திர விவாதத்தைக் கிளப்பியது. முறையான பயணச்சீட்டு இல்லாமல் கார்டு பணத்தைப் பெற்றுக் கொண்டு பயணிகளை ரயிலில் ஏற்றுகிறார் என்று நினைத்து, அங்கிருந்த பயணி ஒருவர் இந்த ஒட்டுமொத்த சம்பவத்தையும் வீடியோவாகப் பதிவு செய்திருந்தார்.

இருப்பினும், இதன் பின்னணியில் உள்ள உண்மைத் தகவல் பின்னர் வெளிவந்து அனைவரையும் ஆச்சரியத்தில் ஆழ்த்தியது. உண்மையில் அந்தச் சிறிய கிராமத்தில் ரயில் நிலையக் கட்டடமோ அல்லது பயணச்சீட்டு வழங்கும் கவுண்டரோ கிடையாது. அங்கு ரயில் நிற்குமே தவிர மக்களால் டிக்கெட் வாங்க முடியாது என்பதால், விதிமுறைகளின் படியே பயணிகள் அனைவரும் ரயிலில் ஏறியவுடன் அதற்கான கட்டணத்தை நேரடியாக ரயிலின் கார்டிடமே செலுத்தி, அவரிடமிருந்தே தங்களின் பயணச்சீட்டைப் பெற்றுக் கொள்கின்றனர். ரயில் நிலையமே இல்லாமல், ரயிலுக்குள்ளேயே நேரடியாக டிக்கெட் பெற்றுக் கொள்ளும் இந்த வினோதமான நடைமுறை இணையவாசிகளால் பெரிதும் ரசிக்கப்பட்டு வருகிறது.

Advertisement
Continue Reading
Advertisement

Copyright © 2023 www.cinefeeds.in