“யாரும்மா நீ..? தனியா போற பயம் இல்லையா..?” ஆஃப்கானிஸ்தானில் தாலிபான்களை அலறவிட்ட இந்தியப் பெண்… தனியாகக் காபூலுக்கு நடைபயணம் – தடுத்து நிறுத்தி நடத்திய அதிரடி விசாரணை…!! – cinefeeds
Connect with us

LATEST NEWS

“யாரும்மா நீ..? தனியா போற பயம் இல்லையா..?” ஆஃப்கானிஸ்தானில் தாலிபான்களை அலறவிட்ட இந்தியப் பெண்… தனியாகக் காபூலுக்கு நடைபயணம் – தடுத்து நிறுத்தி நடத்திய அதிரடி விசாரணை…!!

Published

on

ஆஃப்கானிஸ்தானில் தனியாகப் பயணம் செய்து கொண்டிருந்த இந்தியப் பெண் யூடியூபர்/பயணியை தாலிபான் படைவீரர்கள் வழியில் தடுத்து நிறுத்தியுள்ளனர். அவர் தனியாக காபூல் நோக்கி நடைபயணமாகச் சென்று கொண்டிருந்தபோது, அவரைச் சூழ்ந்துகொண்ட தாலிபான்கள், எந்தவித ஆண் துணையும் இல்லாமல் ஒரு பெண் தனியாக ஏன் பயணம் செய்கிறார் என்றும், காபூலை நோக்கி ஏன் நடந்து செல்கிறார் என்றும் கேள்விகளை எழுப்பியுள்ளனர்.

https://www.instagram.com/reel/Dc783wGOtfb/?utm_source=ig_web_button_share_sheet

Advertisement

இந்த விசாரணையின் போது, அப்பெண் தான் இந்தியாவில் இருந்து வந்துள்ளதாகவும், நாட்டின் அழகையும் மக்களின் வாழ்க்கையையும் கண்டுகளிப்பதற்காகவே சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ளதாகவும் அமைதியான முறையில் விளக்கமளித்தார். தாலிபான்களின் கடுமையான கட்டுப்பாடுகள் மற்றும் பெண்களுக்கான பயண விதிகள் நிலவும் சூழலிலும், அப்பெண் எவ்வித பயமுமின்றி அவர்களது கேள்விகளுக்குப் பதிலளித்தது அப்பகுதியினரையும் இணையவாசிகளையும் ஆச்சரியத்தில் ஆழ்த்தியது.

இந்தச் சம்பவம் தொடர்பான வீடியோ சமூக வலைதளங்களில் வெளியாகி வைரலாகி வருகிறது. ஆபத்தான சூழலிலும் இந்தியப் பெண் காட்டிய தைரியத்தையும், அதே நேரத்தில் பாதுகாப்பு அச்சுறுத்தல்கள் நிறைந்த பகுதியில் தனியாகப் பயணம் செய்வதில் உள்ள ஆபத்துகளையும் சுட்டிக்காட்டி நெட்டிசன்கள் பல்வேறு கருத்துகளைப் பதிவிட்டு வருகின்றனர்.

Advertisement
Continue Reading
Advertisement

Copyright © 2023 www.cinefeeds.in