அடப்பாவி..! அதற்காக பயந்து AI-யில் போலி புலி வீடியோ… இளைஞர் செய்த காரியத்தால் நடுநடுங்கிப்போன கிராம் மக்கள்… சோம்பேறி வாலிபருக்கு வனத்துறை கொடுத்த தண்டனை…!! – cinefeeds
Connect with us

LATEST NEWS

அடப்பாவி..! அதற்காக பயந்து AI-யில் போலி புலி வீடியோ… இளைஞர் செய்த காரியத்தால் நடுநடுங்கிப்போன கிராம் மக்கள்… சோம்பேறி வாலிபருக்கு வனத்துறை கொடுத்த தண்டனை…!!

Published

on

கர்நாடகாவில் சோம்பேறித்தனத்தால் தோட்ட வேலைக்குச் செல்ல பயந்த வாலிபர் ஒருவர், ஏ.ஐ. தொழில்நுட்பத்தைப் பயன்படுத்தி போலியாகப் புலி வீடியோ ஒன்றை உருவாக்கிப் பரப்பிய வினோத சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. கொப்பல் மாவட்டத்தின் காவலி கிராமத்தைச் சேர்ந்த 25 வயது வாலிபரான ஈரண்ணாவுக்கு, வனப்பகுதியை ஒட்டியவாறு ஒரு தோட்டம் சொந்தமாக உள்ளது. அந்தத் தோட்டத்திற்குச் சென்று வேலை பார்க்குமாறு குடும்பத்தினர் வற்புறுத்தியதால், அதில் இருந்து தப்பிக்க நினைத்த ஈரண்ணா, தனது தோட்டத்தில் புலி உலா வருவது போன்ற போலி வீடியோவை ஏ.ஐ. மூலம் தயாரித்து சமூக வலைதளங்களில் பதிவிட்டுள்ளார்.

இந்த வீடியோ காட்டுத்தீயாய் பரவியதை அடுத்து, பயந்துபோன கிராம மக்கள் உடனடியாக வனத்துறை அதிகாரிகளுக்கு அச்சத்துடன் தகவல் தெரிவித்தனர். சம்பவ இடத்திற்கு விரைந்து வந்த வனத்துறையினர் தோட்டம் முழுவதும் தீவிரமாகத் தேடியும் புலியின் கால் தடங்கள் எதுவும் சிக்காததால் அவர்களுக்குச் சந்தேகம் எழுந்தது. தொடர்ந்து ஈரண்ணாவை நேரில் அழைத்து அதிகாரிகள் நடத்திய கிடுக்கிப்பிடி விசாரணையில், தான் வேலைக்குச் செல்வதைத் தவிர்ப்பதற்காகவே செயற்கை நுண்ணறிவு தொழில்நுட்பத்தில் போலி புலி வீடியோவை உருவாக்கியதை அவர் ஒப்புக்கொண்டார்.

Advertisement

பொய்யான தகவலைப் பரப்பி கிராம மக்களிடையே பீதியை ஏற்படுத்தியதற்கும், தங்களது பொன்னான நேரத்தை வீணடித்ததற்கும் வனத்துறையினர் ஈரண்ணாவுக்கு ஒரு படிப்பினையான நூதன தண்டனையை வழங்கினர். அவரைத் தோட்டத்திற்கே அழைத்துச் சென்று, கிராம மக்கள் அனைவரின் முன்னிலையிலும் 50 தோப்புக்கரணம் போட வைத்து அதிகாரிகள் அதிரடி காட்டினர். இனிமேல் இதுபோன்ற ஆபத்தான வேலைகளில் ஈடுபடக் கூடாது என்று அவரைக் கடுமையாக எச்சரித்த நிலையில், ஈரண்ணா தோப்புக்கரணம் போடும் அந்த வீடியோவும் தற்போது இணையத்தில் வெளியாகி நெட்டிசன்களிடையே மிக வேகமாக வைரலாகி வருகிறது.

Advertisement
Continue Reading
Advertisement

Copyright © 2023 www.cinefeeds.in