“அந்த மனசு தான் சார் கடவுள்!” தர்ணாவில் தடுமாறிய திமுக எம்.எல்.ஏ… ஓடிவந்து கைகொடுத்து தூக்கிய முதலமைச்சர் விஜய்.. நெகிழவைக்கும் வைரல் வீடியோ..! – cinefeeds
Connect with us

LATEST NEWS

“அந்த மனசு தான் சார் கடவுள்!” தர்ணாவில் தடுமாறிய திமுக எம்.எல்.ஏ… ஓடிவந்து கைகொடுத்து தூக்கிய முதலமைச்சர் விஜய்.. நெகிழவைக்கும் வைரல் வீடியோ..!

Published

on

தமிழக சட்டப்பேரவையில் ஆளும் தவெக மற்றும் எதிர்க்கட்சியான திமுக இடையே காரசாரமான அரசியல் மோதல் நிலவி வரும் சூழலில், தர்ணாவில் ஈடுபட்டு எழுந்திருக்க முடியாமல் தடுமாறிய திமுக எம்.எல்.ஏவுக்கு முதலமைச்சர் விஜய் கைகொடுத்து உதவிய மனிதநேய வீடியோ சமூக வலைத்தளங்களில் வைரலாகி வருகிறது. சட்டப்பேரவையில் காவல்துறை மானியக் கோரிக்கை விவாதத்திற்கு முதலமைச்சர் விஜய் பதிலளித்துப் பேசுகையில், கடந்த திமுக ஆட்சியில் எல்லா துறைகளிலும் ஊழல் நடந்ததாக அமலாக்கத்துறை கூறியுள்ளதாகக் குற்றம் சாட்டினார்.

இதற்கு எதிர்ப்பு தெரிவித்துப் பேச தங்களுக்குச் சபாநாயகர் அனுமதி தராததால், எதிர்க்கட்சித் தலைவர் உதயநிதி ஸ்டாலின் உள்ளிட்ட திமுக எம்.எல்.ஏக்கள் பேரவையில் கடும் அமளியில் ஈடுபட்டு சபாநாயகர் இருக்கை முன்பு தரையில் அமர்ந்து தர்ணா செய்தனர். இந்த தர்ணா போராட்டத்தின் போது, திருவையாறு தொகுதி திமுக எம்.எல்.ஏ துரை சந்திரசேகரன் முதலமைச்சர் விஜய்யின் இருக்கைக்கு முன்பாகக் கீழே அமர்ந்து தர்ணா செய்தார். போராட்டம் முடிந்து அவர் தரையில் இருந்து மீண்டும் எழுந்திருக்க முயன்றபோது உடல்நலக் குறைபாடு காரணமாகக் கடும் சிரமப்பட்டு தடுமாறினார். இதனைக் கவனித்த முதலமைச்சர் விஜய், உடனே சற்றும் யோசிக்காமல் அவரது கையைப் பிடித்துத் தூக்கிவிட்டு உதவி செய்தார்.

Advertisement

அரசியல் மாச்சரியங்களைக் கடந்து முதலமைச்சர் விஜய் காட்டிய இந்த மனிதநேயப் பண்பு பேரவையில் இருந்த அனைவரையும் நெகிழ வைத்தது. மேலும், அந்த முதிய வயது எம்.எல்.ஏ கீழே அமர்ந்து தர்ணா செய்வதற்கு ஏதுவாக, முதலமைச்சர் விஜய் தனது மேஜையைச் சற்றே பின்னோக்கி இழுத்துப் போட்டு அவருக்கு வழிவிட்டார். கடுமையான அரசியல் வார்த்தைப் போர்களுக்கு நடுவே நிகழ்ந்த இந்த நெகிழ்ச்சியான சம்பவத்தின் வீடியோ காட்சிகள் தற்போது இணையப் பக்கங்களில் நெட்டிசன்களால் அதிகம் பகிரப்பட்டு வருகிறது.

Advertisement
Continue Reading
Advertisement

Copyright © 2023 www.cinefeeds.in