பகீர் திருப்பம்..! “கர்ப்பத்தை கலைக்க சொல்லியும் கேட்கல” அதனால் கழுத்தை அறுத்து.. ரத்தத்தை பிரியாணி அண்டாவில் பிடித்து.. கொலைகார ஜோடியின் அதிரவைக்கும் வாக்குமூலம்..!! – cinefeeds
Connect with us

CRIME

பகீர் திருப்பம்..! “கர்ப்பத்தை கலைக்க சொல்லியும் கேட்கல” அதனால் கழுத்தை அறுத்து.. ரத்தத்தை பிரியாணி அண்டாவில் பிடித்து.. கொலைகார ஜோடியின் அதிரவைக்கும் வாக்குமூலம்..!!

Published

on

செங்கல்பட்டு மாவட்டம் கூடுவாஞ்சேரியில் சூட்கேஸ் மற்றும் பிரியாணி டபராவில் பெண் ஒருவரின் உடல் துண்டுகளாகக் கண்டெடுக்கப்பட்ட வழக்கில், தற்போது கைது செய்யப்பட்டுள்ள தம்பதியினரிடம் நடத்தப்பட்ட விசாரணையில் அடுத்தடுத்து அதிர்ச்சியூட்டும் வாக்குமூலங்கள் வெளியாகியுள்ளன. இந்த வழக்கில் கைதான மாணிக் உத்தீன் என்பவருக்கும், கொலையான நிஷா என்ற பெண்ணுக்கும் இடையே தகாத உறவு இருந்து வந்துள்ளது. இந்த சூழலில் நிஷா கர்ப்பமடைந்ததே இந்தக் கொடூரக் கொலைக்கு முக்கியக் காரணமாக அமைந்துள்ளது.

நிஷா கர்ப்பமடைந்ததைத் தொடர்ந்து, அந்தப் பிள்ளையைக் கலைத்துவிடுமாறு மாணிக் உத்தீனும், அவருடைய மனைவி பகவதி மாஜூவும் சேர்ந்து நிஷாவைத் தொடர்ந்து வற்புறுத்தி வந்ததாகக் கூறப்படுகிறது. ஆனால், அதற்கு நிஷா திட்டவட்டமாக மறுப்பு தெரிவித்ததால், ஆத்திரமடைந்த தம்பதியினர் அவரைத் தீர்த்துக் கட்ட முடிவு செய்துள்ளனர். அதன்படி நிஷாவைக் கொலை செய்த தம்பதி, கொலையை மறைப்பதற்காக அவரது உடலைத் துண்டு துண்டாக வெட்டியுள்ளனர்.

Advertisement

உடலை வெட்டுவதற்கு முன்பாக நிஷாவின் கழுத்தை அறுத்து, அதிலிருந்து வெளிவந்த ரத்தத்தைப் பிரியாணி அண்டாவில் பிடித்ததாகக் கைதான தம்பதியினர் தங்களது வாக்குமூலத்தில் தெரிவித்துள்ளனர். அதன் பின்னரே உடலைத் துண்டுகளாக வெட்டி சூட்கேஸ் மற்றும் டபராவில் அடைத்து வீசியுள்ளனர். தமிழகத்தையே உலுக்கியுள்ள இந்த கொடூரக் கொலைச் சம்பவம் குறித்துக் கூடுவாஞ்சேரி காவல்துறையினர் தம்பதியிடம் தொடர்ந்து தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர்.

Advertisement
Continue Reading
Advertisement

Copyright © 2023 www.cinefeeds.in