CRIME
அடக் கொடுமையே.. நெஞ்சை வெடிக்க வைத்த டிஜே சத்தம்.. கணேசர் ஊர்வலத்தில் 2 பேருக்கு நேர்ந்த விபரீதம்.. உலுக்கும் சோக சம்பவம்..!!
ஆந்திரப் பிரதேச மாநிலத்தில் நடைபெற்ற கணேசர் சிலை விசர்ஜன ஊர்வலங்களின் போது ஏற்பட்ட நெரிசல் மற்றும் அதிக சத்தத்துடன் இயக்கப்பட்ட டிஜே இசையின் காரணமாக இருவர் பரிதாபமாக உயிரிழந்த சோகச் சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. கர்னூல் ரூரல் மண்டலத்தில் உள்ள தண்டராபாடு பகுதியில், கணேசர் ஊர்வலத்தில் வைக்கப்பட்டிருந்த டிஜே ஸ்பீக்கர்களின் அதிரவைக்கும் அதித சத்தம் தாங்க முடியாமல் சிவம்மா என்ற பெண்மணி சம்பவ இடத்திலேயே உயிரிழந்துள்ளார். பண்டிகைக் கொண்டாட்டத்தின் போது ஒலி மாசு மற்றும் அதிக சத்தம் பொதுமக்களின் உயிருக்கே ஆபத்தாக முடியும் என்பதை இந்தச் சம்பவம் மீண்டும் உணர்த்தியுள்ளது.
இதேபோன்று மற்றொரு சோகச் சம்பவமாக, நந்தியால் மாவட்டத்தில் உள்ள டொன்கா என்ற பகுதியில் கணேஷ் கவுடா என்ற வாலிபர் ஊர்வலத்தில் டிஜே பாடல்களுக்கு உற்சாகமாக நடனமாடிவிட்டு வீட்டிற்குத் திரும்பியுள்ளார். வீட்டிற்குச் சென்ற சிறிது நேரத்திலேயே அவருக்கு திடீரென மாரடைப்பு ஏற்பட்டு பரிதாபமாக உயிரிழந்தார். பக்தி மற்றும் கொண்டாட்டங்களின் போது பயன்படுத்தப்படும் இந்த அதிகப்படியான டிஜே சத்தம், மக்களின் இதய ஆரோக்கியத்திற்கு எவ்வளவு பெரிய அச்சுறுத்தலாக மாறிவருகிறது என்பது குறித்து சமூக வலைத்தளங்களில் தற்போது பெரும் விவாதமும் கவலையும் எழுந்துள்ளன.
