உச்சகட்ட கொடூரம்.. குளிர் பானத்தில் மயக்க மருந்து கலந்து இளம்பெண்களுக்கு நேர்ந்த பயங்கரம்… வீடியோ எடுத்து மிரட்டிய தம்பதி.. அழகு நிலையத்திற்குள் அரங்கேறிய கொடூர சம்பவம்…!! – cinefeeds
Connect with us

CRIME

உச்சகட்ட கொடூரம்.. குளிர் பானத்தில் மயக்க மருந்து கலந்து இளம்பெண்களுக்கு நேர்ந்த பயங்கரம்… வீடியோ எடுத்து மிரட்டிய தம்பதி.. அழகு நிலையத்திற்குள் அரங்கேறிய கொடூர சம்பவம்…!!

Published

on

அழகு நிலையம் நடத்தி வந்த யாஸ்மின் கான் என்பவர், இளம்பெண்களுக்கு இலவசப் பயிற்சி அளிப்பதாகக் கூறி அவர்களைத் தனது நிலையத்திற்கு வரவழைத்துள்ளார். அங்கு வந்த பெண்களுக்குக் குளிர்பானத்தில் மயக்க மருந்து கலந்து கொடுத்து, அவர்கள் சுயநினைவை இழந்த பிறகு தனது கணவர் முகமது கானை வரவழைத்துள்ளார். யாஸ்மின் வாசலில் காவலுக்கு நிற்க, முகமது கான் அந்தப் பெண்களைப் பாலியல் வன்கொடுமை செய்ததாகக் குற்றம் சாட்டப்பட்டுள்ளது.

மேலும், இந்தக் கொடூரச் செயல்களை வீடியோவாகப் பதிவு செய்து, அதனைக் காட்டி மிரட்டி அந்தப் பெண்களை வேறு சில நபர்களுக்கும் இரையாக்க முயன்றதாகவும் கூறப்படுகிறது. இது தொடர்பான விசாரணையின் போது, இத்தகைய செயல்களில் ஈடுபடுவதன் மூலம் தங்களுக்குச் சொர்க்கம் கிடைக்கும் என்று யாஸ்மின் கூறியதாகத் தகவல்கள் வெளியாகி பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளன.

Advertisement
Continue Reading
Advertisement

Copyright © 2023 www.cinefeeds.in